SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்சி மத்திய சிறையில் ஐடிஐ பயிற்சியில் 114 கைதிகள்

2018-10-14@ 02:16:07

திருச்சி: திருச்சி மத்திய சிறையில் 114 கைதிகள் ஐடிஐ பயிற்சி ெபறுகின்றனர். தமிழகத்தில் 9 மத்திய சிறைகள் உள்ளது. திருச்சி சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் சுமார் 1,300 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.  அனைத்து மத்திய சிறைகளிலும் தண்டனை முடிந்து வெளியே செல்லும் கைதிகள் மனந்திருந்தி மாற்று தொழில் செய்யும் வகையில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக சிறைகளிலேயே திருச்சி சிறையில் கைதிகளுக்கான ஐடிஐ துவங்கப்பட்டது. இங்கு பிட்டர், எலக்ட்ரீஷியன், கட்டிங், வெல்டிங், கம்ப்யூட்டர் புரோகிராம் என 5 கிரேடு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

இந்த பயிற்சி கடந்த மாதம் துவங்கியது. 3 மாத கால பயிற்சி. தமிழகத்தில் உள்ள 8 மத்திய சிறைகளில் இருந்து பயிற்சி பெற விரும்பும் கைதிகள் முன்னதாகவே பதிவு செய்து 3 மாதம் இங்கேயே தங்கி இருந்து பயிற்சி எடுக்க வேண்டும். இந்த பயிற்சியில் இந்தாண்டு திருச்சி கைதிகள் 40 பேர், கடலூர் கைதிகள் 7 பேர், கோவை கைதிகள் 19 பேர், மதுரை கைதிகள் 15 பேர், பாளையங்கோட்டை கைதிகள் 17 பேர், வேலூர் கைதிகள் 15 பேர் புழல் கைதிகள் ஒருவர் என 114 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். பயிற்சி முடித்த பின் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். ஐடிஐ பயிற்சி 10ம் வகுப்பு படித்த தண்டனை கைதிகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்