SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாருதியின் மினி கார் விரைவில் அறிமுகம்

2018-10-14@ 02:13:08

கடந்த  பிப்ரவரி மாதம் நடந்த சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி கார் நிறுவனம்  ‘’Future S’’ என்ற பெயரில் மினி எஸ்யூவி ரக கான்செப்ட் மாடல் கார் ஒன்றை  காட்சிக்கு வைத்திருந்தது. மாருதியின் இந்த புதிய மினி எஸ்யூவி ரக கார்  அடுத்த ஆண்டு தீபாவளி நெருக்கத்தில் விற்பனைக்கு களமிறக்கப்பட  வாய்ப்புள்ளது. இந்த புதிய மினி எஸ்யூவி ரக கார், 4 மீட்டருக்கும் குறைவான  நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்புதிய கார், கிராஷ் டெஸ்ட்  விதிமுறைகளுக்கு உட்பட்டு, மிக வலுவான கட்டமைப்புடன் அதிக பாதுகாப்பு  அம்சங்களை பெற்றுள்ளது. தரத்திலும் மிகச்சிறப்பான மாடலாக  உருவாக்கப்பட்டு வருகிறது. தற்போது விற்பனையில் உள்ள விட்டாரா பிரெஸ்ஸாவும்  4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட மாடல்தான்.

ஆனால், அதைவிட இப்புதிய  மினி எஸ்யூவி ரக கார் நீளம் குறைவாக இருக்கும். மாருதி இக்னிஸ் காரின் வீல்  பேஸ் அளவையே இதுவும் பெற்றிருக்க வாய்ப்புள்ளது. வலிமையான பானட் அமைப்பு,  பெரிய வீல் ஆர்ச்சுகள் மற்றும் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் போன்றவற்றுடன்  வசீகரமாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது.  இப்புதிய காரில், 5  பேர் பயணிக்கும் இருக்கை வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் விலை உயர்ந்த  வேரியண்ட்டில் தொடுதிரை இன்போடெயின்மென்ட் சிஸ்டம், கிளைமேட் கன்ட்ரோல் ஏசி  சிஸ்டம் உள்ளிட்ட பிரிமியம் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது  மாருதியின் பல பட்ஜெட் கார் மாடல்களில் பயன்படுத்தப்பட்டு வரும் 1.2  லிட்டர் பெட்ரோல் இன்ஜின்தான் இப்புதிய மினி எஸ்யூவி ரக காரிலும்  பயன்படுத்தப்பட இருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி  கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் எதிர்பார்க்கலாம். இப்புதிய கார், ₹5 லட்சம்  ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்புதிய மினி எஸ்யூவி ரக கார், மாருதி நிறுவனத்திற்கு பெரும் பக்கபலமாக  அமையும் என்று நம்பலாம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

  • oaman_thee11

    மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

  • AftermathProtestHK

    ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்