SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டட்சன் கோ மற்றும் கோ பிளஸ் மாடல்களுக்கு முன்பதிவு

2018-10-14@ 02:12:08

புதிய  டட்சன் கோ மற்றும் கோ பிளஸ் மாடல்களுக்கு முன்பதிவு  துவங்கியுள்ளது. வடிவமைப்பில் சிறிய மாற்றங்கள் மற்றும் கூடுதல்  சிறப்பம்சங்களுடன் புதிய டட்சன் கோ மற்றும் கோ பிளஸ் கார்கள், அக்டோபர்  9ம்தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. தற்போது டீலர்களிடம்  முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள டட்சன் கார்  ஷோரூம்களில் ₹11,000 முன்பணத்துடன் இந்த கார்களுக்கு முன்பதிவு  ஏற்கப்படுகிறது. இவ்விரு மாடல்களும் 5 வேரியண்ட்டுகளில், இரண்டு புதிய  வண்ணங்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. ஆம்பர் ஆரஞ்ச் மற்றும் சன்ஸ்டோன்  பிரவுன் ஆகிய வண்ணங்களில் புதிதாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
டட்சன்  கோ மற்றும் கோ பிளஸ் கார்களில் புதிய முகப்பு கிரில் அமைப்பு, ஹெட்லைட்,  புதிய பம்பருடன் முகப்பு வசீகரமாக மாற்றப்பட்டு இருக்கிறது. எல்இடி பகல்நேர  விளக்கு சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

இந்த இரண்டு புதிய மாடல்களிலும்  14 அங்குல அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. குறைவான விலை மாடல்களில் ஸ்டீல்  சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. உட்புறத்தில் மேம்படுத்தப்பட்ட  பாகங்கள், புதிய டேஷ்போர்டு அமைப்பு வசீகரமாக இருக்கிறது. அனலாக் டாக்கோ  மீட்டருடன்கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் அமைப்பு வரவேற்கத்தக்க விஷயமாக  உள்ளது. எலெக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதியுடன்கூடிய சைடு மிரர்கள், ரியர் பவர் விண்டோஸ் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார் இடம்பெறுகிறது.

புதிய  டட்சன் கோ மற்றும் கோ பிளஸ் கார்களில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்  தக்கவைக்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவரையும், 104  என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில்  கிடைக்கும். இந்தோனேஷியாவில் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.ஆனால், இந்திய மாடலில் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் வருவதற்கான  வாய்ப்புள்ளது.பண்டிகை காலத்தில் பட்ஜெட் கார்களை எதிர்பார்ப்பவர்களை  குறிவைத்து இந்த இரு மாடல்களையும் டட்சன் நிறுவனம் களமிறக்க இருக்கிறது.  விலை விவரம் அறிவிக்கப்படவில்லை.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-06-2019

    19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்