SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்திய அளவில் எல்லா நிலையிலும் ஊழலில் தமிழகம் 3வது இடம்: உ.பி.க்கு முதலிடம்

2018-10-14@ 02:08:11

சென்னை: எல்லா நிலைகளிலும் ஊழல் பட்டியலில் தமிழகம் 3வது இடத்தை பெற்றுள்ளது. இந்த பட்டியலில் உத்தர பிரதேசம் முதலிடத்தையும் பஞ்சாப் 2வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளன. நாடு முழுவதும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் இண்டியா கரப்ஷன் சர்வே 2018 என்ற பெயரில் சர்வே எடுக்கப்பட்டது. 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த சர்வே எடுக்கப்பட்டது. உத்தரபிரதேசத்தில் வீடுகளில் உள்ளவர்களிடம் எடுக்கப்பட்ட சர்வேயில் 21 சதவீதம் பேர் தங்களுக்கு தினமும் வேலை தருவதற்கே அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது என்றனர். சர்வேயில் பங்குகொண்டோரில் 59 சதவீதம் பேர் தாங்கள் லஞ்சம் கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளனர்.

லஞ்சத்தில் உத்தர பிரதேசத்திற்கு  அடுத்த இடத்தில் உள்ள பஞ்சாப்பில் எடுக்கப்பட்ட சர்வேயில் 56 சதவீதம்பேர் லஞ்சம் கொடுத்ததாக தெரிவித்துள்ளனர். இந்த வரிசையில் 3வது இடத்தைப் பெற்றிருப்பது தமிழகம்தான். தமிழகத்தில் பெரும்பாலும் லஞ்சப் பட்டியலில் முன்னணியில் இருப்பது பத்திரப்பதிவு துறைதான் என்று சர்வேயில் தெரிய வந்துள்ளது. சர்வே எடுக்கப்பட்டவர்களில் 52 சதவீதம் பேர் தாங்கள் லஞ்சம் கொடுத்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் பத்திரப்பதிவு துறைக்கு அடுத்த இடத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக லஞ்சம் அதிகம் வாங்கப்படுவது காவல்துறைதான்.

தங்களின் பணிகளை செய்து தருவதற்காக லஞ்சம் கொடுக்கிறோம் என்று 22 சதவீதம் பேரும், பணிகளை விரைந்து முடிப்பதற்காக லஞ்சம் கொடுக்கிறோம் என்று 36 சதவீதம் பேரும் கருத்து ெதரிவித்துள்ளனர். லஞ்சத்தை ஒழிப்பதற்காக அரசுகள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று 34 சதவீதம்பேர் தெரிவித்துள்ளனர். லஞ்சத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் லஞ்சத்தை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளதாக அந்த சர்வே தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-02-2019

    23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்