SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டி.எம்.எஸ் - வண்ணாரப்பேட்டை இடையே டிசம்பர் இறுதிக்குள் மெட்ரோ ரயில் சேவை

2018-10-14@ 02:07:26

சென்னை: டி.எம்.எஸ் (தேனாம்பேட்டை)- வண்ணாரப்பேட்டை இடையேயான மெட்ரோ ரயில் சேவை டிசம்பர் இறுதிக்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைத்து விரைவு சேவையை மேம்படுத்தும் பொருட்டு மெட்ரோ ரயில் சேவையானது திட்டமிடப்பட்டு தற்போது பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. கோயம்பேடு முதல் ஆலந்தூர் மற்றும் சின்னமலை முதல் விமானநிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம் முதல் சென்ட்ரல் மற்றும் சைதாப்பேட்டை முதல் டி.எம்.எஸ் இடையே சுரங்கபாதை வழித்தடத்திலும் தற்போது சேவை பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது.

இதேபோல், டி.எம்.எஸ் முதல் அண்ணாசலை வழித்தடத்தில் சுரங்கபாதையில் வண்ணாரப்பேட்டை வரையில் தற்போது பணிகள் பெரும்பாலும் முடிவடைந்துவிட்டது. ஏற்கனவே, கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த வழித்தடத்தில் 15 கி.மீட்டர் தூரத்திற்கு என்ஜினை வைத்து நடத்தப்பட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிலையில், அடுத்தமாதம் மெட்ரோ ரயில் பெட்டிகளை கொண்டு சோதனை ஓட்டம் நடைபெற இருப்பதாகவும், டிசம்பர் இறுதிக்குள் இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:

இந்த வழித்தடத்தில் அடுத்தமாதம் ரயில்பெட்டிகளை கொண்டு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்துவதற்கான தேதி இன்னும் குறிப்பிடப்படவில்லை. தொடர்ந்து ஒரு மாதம் இந்த சோதனை ஓட்டம் நடைபெறும். மேலும், டிசம்பர் இறுதிக்குள் டி.எம்.எஸ் முதல் வண்ணாரப்பேட்டை இடையேயான வழித்தட சேவையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான முயற்சியில் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. தற்போது இந்த வழித்தடத்தில் மின்சார வயர்கள் பொருத்துவது, சிக்னல் கம்பங்கள் பொருத்துவது உள்ளிட்ட பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இவ்வாறு கூறினார். இதன் மூலம் வண்ணாரப்பேட்டையில் இருந்து விமானநிலையத்திற்கு பயணிகள் விரைவாக சென்றடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்