SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊழல் குறித்து சிபிஐ விசாரணை முதல்வர் பதவி விலக வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

2018-10-14@ 02:06:40

சென்னை: “ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து முதல்வர் பதவி விலக வேண்டும்” என்று வைகோ வலியுறுத்தி உள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: நெடுஞ்சாலைத்துறையின் 3120 கோடி ரூபாய் மதிப்புடைய ஒப்பந்தப் பணிகள். முதல்வரின் உறவினர் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதில் விதிமுறைகள் மீறப்பட்டு, முறைகேடுகள் நடந்துள்ளன. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, துறைதோறும் ஊழல் சேற்றில் மூழ்கிக் கிடக்கின்றது. உயர்நீதிமன்றம், நெடுஞ்சாலைத்துறை ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதால்  எடப்பாடி பழனிசாமி முதல்வர் பொறுப்பில் நீடிக்க தார்மீக உரிமை இல்லை. எனவே அவர் முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும்.

ஊழல் அரசுக்கு முட்டுக்கொடுக்க நினைப்பவர்களை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் வி.எம்.எஸ். முஸ்தபா: தமிழக அரசு பல ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கிறது. இந்த நிலையில்  உச்சக்கட்டமாக முதல்வர் மீது சி.பி.ஐ விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு தார்மீக பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதவி விலக முன்வரவேண்டும். இல்லையென்றால் மக்கள் விரைவில் அவரை பதவியிலிருந்து விலக்குவார்கள். இவ்வாறு தலைவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்