SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தனியார் கட்டுப்பாட்டில் இருந்த ேபாதுதான் திருட்டு தமிழகம் முழுவதும் கோயில்களில் 3.42 லட்சம் சிலைகள் உள்ளன: இந்து அறநிலையத்துறை தகவல்

2018-10-14@ 02:06:00

சென்னை: தமிழக முழுவதும் 3 லட்சத்து 42 ஆயிரம் சிலைகள் உள்ளது என்று இந்து அறநிலையத்துறை ஆதாரப்பூர்வமாக தகவல்களை வெளியிட்டுள்ளது. இது குறித்து இந்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: கோயில்களில் நடைபெற்ற சிலை திருட்டு நிகழ்வுகள் பெரும்பாலும் அந்த கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறை ஆளுகையின் கீழ் கொண்டு வரப்படுவதற்கு முன்பாக தனியார் நிர்வாகிகள் பொறுப்பில் இருந்த காலத்தில் நடைபெற்றது. உதாரணமாக, நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருள்மிகு குலசேகரமுடையார் கோயிலில் இருந்த நடராஜர் சிலை 1982ல் திருடப்பட்டு தற்போது, ஆஸ்திரேலியா நாட்டு அருங்காட்சியத்தில் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இக்கோயில் 1998ல் தான் இத்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு கோயில்களில் நடைபெற்ற பெரும்பாலான சிலை திருட்டு நிகழ்வுகள் துறையின் கீழ் வருவதற்கு முன்பாக பல்வேறுபட்ட தனியார் நிர்வாகத்தில் இருந்த போது நடந்தது.

கோயில்களின் சிலைகள் பாதுகாப்பு தொடர்பாக இத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் 3 லட்சத்து 42 ஆயிரம் சிலைகள் குறித்த முழுமையான அளவீட்டு விவரங்கள், 4 கோண புகைப்படங்களுடன் கணினியின் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டள்ளன. கோயில்களில் பாதுகாப்பிற்கு 5024 திருட்டு எச்சரிக்கை மணி, 1609 கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் உறுதியான இரும்பு கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. 2599 பகல் மற்றும் இரவு காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கோயில்களின் பாதுகாப்பிற்காக 1000 இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் 3 ஆயிரம் முன்னாள் படை வீரர்கள் கொண்ட கோயில் பாதுகாப்பு படை ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல்வர் அறிவுறுத்தலின்படி 2 ஆயிரம் காவலர்கள் கொண்ட கோயில் பாதுகாப்பு படை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நிதிவசதி குறைந்த கோயில்களில் உள்ள சிலைகளை பாதுகாக்கும் பொருட்டு 34 உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையங்கள் கட்டப்பட்டு, இதுவரை 19 மையங்கள் செயல்பாட்டில் உள்ளது. இந்த மையங்களில் 8,128 உலோக திருமேனிகள் பாதுகாப்பாக உள்ளன. மேலும், கடந்த 100 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இருந்து திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்ட உலோக விக்கிரகங்கள் மற்றும் கற்சிலைகள் குறித்த தகவல்கள் பல்வேறு தரப்பில் இருந்து இத்துறையால் சேகரிக்கப்பட்டு வருகின்றன. சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பல தரப்பட்ட உத்திகளில் கண்டுபிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • flood

    அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

  • holifestivel

    வடமாநிலங்களில் வண்ணப்பொடிகளை பூசி ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்