SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதல்வர் மீதான ஊழல் குற்றச்சாட்டு இப்போது கருத்து கூற முடியாது: பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி

2018-10-14@ 02:05:00

சென்னை: ‘முதல்வர் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து இப்போது எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது’ என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.     உலகின் இரண்டாம் இளம் கிராண்ட்  மாஸ்டர் என்ற சாதனையைப் படைத்த சென்னையைச் சேர்ந்த 12 வயது சிறுவன்  பிரக்ஞானந்தா மற்றும் சர்வதேச செஸ் போட்டியில் சாதனைப் படைத்த வைஷாலி  ஆகியோருக்கு மத்திய அமைச்சர் ெபான்.ராதாகிருஷ்ணன், மத்திய அரசின் உதவித்  தொகையை நேற்று வழங்கினார். இதனைத் தொடர்ந்த அவர் அளித்த பேட்டி: 12  வயதுக்குட்பட்டோருக்கான சதுரங்க விளையாட்டு போட்டியில் வைஷாலி பங்கேற்று  சாதனை படைத்துள்ளார். பிரக்ஞானந்தா மிகப்பெரிய சாதனை படைத்து உலகம்  முழுவதும் பாராட்டுக்களை பெற்று இருக்கிறார். தமிழக முதல்வர் மீது சிபிஐ விசாரணை  நடத்த வேண்டும் என நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. விசாரணைக்கு முன்பு எந்த கருத்தையும் தெரிவிக்க முடியாது. அதனால்  நாங்கள் இப்போது எதுவும் சொல்ல விரும்பவில்லை.

பிரதமர் மோடி மாநிலத்தில் முதல்வராக  இருந்தவர். அந்த மாநிலத்தை எந்த அளவுக்கு முன்னேற்றத்தை கொண்டு வந்தார்.  அதே போல பாஜ ஆளும் மாநிலங்களில் வளர்ச்சி காட்டப்பட்டுள்ளது. அந்த  வளர்ச்சியை ஏன் தமிழகத்தில் கொண்டுவரக்கூடாது. அந்த வளர்ச்சியை தரக்கூடிய  ஊழலற்ற, தூய்மையான, நேர்மையான ஆட்சியை கொண்டுவரக்கூடிய ஒரே கட்சி  தமிழகத்தில் பாஜ தான். தமிழ் சமுதாயத்தை காக்க பிரதமரை விட்டால் யாரும் கிடையாது.  நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜ மீது  எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. குற்றச்சாட்டை சொல்ல வேண்டும்  என்பதற்காக திட்டமிட்டு எதிர்க்கட்சிகள் ஊழல் புகாரை கூறி  வருகின்றனர். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய எந்தவித பிரச்னையும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்