SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குட்கா வழக்கில் விழுப்புரம் எஸ்.பி.யை தொடர்ந்து 4 உயர் அதிகாரிகளிடம் விசாரிக்க சிபிஐ முடிவு

2018-10-14@ 02:03:21

சென்னை: குட்கா விவகாரத்தில் எஸ்பியிடம் விசாரணையைத் தொடர்ந்து மேலும் 4 அதிகாரிகளிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் குட்கா தடையின்றி விற்பனை ெசய்ய அமைச்சர், டிஜிபி, முன்னாள் போலீஸ் கமிஷனர், மத்திய கலால் விரித்துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் என பல முக்கிய அதிகாரிகள் குட்கா வியாபாரி மாதவராவிடம் 40 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து, டிஜிபி. ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், அமைச்சர் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி பல ஆவணங்களை கைப்பற்றினர். சோதனையில் கிடைத்த ஆவணங்களின் படி சிபிஐ அதிகாரிகள் கடந்த மாதம், குட்கா தயாரிப்பாளரான மாதவராவ், பங்குதாரர்கள் உமா சங்கர் குப்தா, சீனிவாசராவ் மற்றும் மத்திய கலால் துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன் மற்றும் சுகாதாரத்துறை ஆய்வாளர் சிவகுமார் உட்பட 6 பேரை கைது செய்தனர்.

சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், குட்கா விவகாரத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் துணை கமிஷனராக இருந்த ஜெயகுமார் தான் அனைத்து நடவடிக்கைகளையும் கவனித்தார் என்று குற்றம்சாட்டி இருந்தார். அதைதொடர்ந்து லஞ்சம் பெற்றதாக கூறப்படும் செங்குன்றத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த சம்பத்தை சிபிஐ அதிகாரிகள் நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின் படி சிபிஐ அதிகாரிகள் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக உள்ள ஜெயகுமாரிடம் 2 நாட்கள் விசாரணை நடத்தினர்.

அப்போது, நான் யாரிடமும் லஞ்ச பணம் பெறவில்லை. உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி தான் நான் நடந்து கொண்டேன். குட்கா வழக்கில் உயர் அதிகாரிகள் அனைவரும் சேர்ந்து என்னை சிக்க வைத்துள்ளார்கள் என்று கூறியதாக சிபிஐ வட்டாரத்தில் தெரிவித்தனர். மேலும், ஜெயகுமார் குட்கா வழக்கில் தன்னை சிக்க வைத்த 4 உயர் போலீஸ் அதிகாரிகள் குறித்து முழு விவரங்களையும் உரிய ஆவணங்களுடன் அதிகாரிகளிடம் வாக்கு மூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் குட்கா வழக்கில் சிக்கி உள்ள உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு சிபிஐ சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கைது நடவடிக்கை எடுப்பது குறித்தும் அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதனால் அடுத்தது யார் என்பதுதான் உயர் போலீஸ் அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்