SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எண்ணூர் துறைமுகம் முதல் மாமல்லபுரம் வரை 6,175 கோடி இணைப்பு சாலைக்கு அனுமதி: 14 நிபந்தனைகள் விதித்தது கடற்கரை மண்டல ஆணையம்

2018-10-14@ 02:02:38

சென்னை: எண்ணூர் முதல் மாமல்லபுரத்தை இணைக்கும் 6175 கோடி மதிப்பில் சென்னை சுற்றுவட்டச்சாலைக்கு தமிழ்நாடு கடற்கரை மண்டல ஆணையம் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் எண்ணூர் துறைமுகம் - மாமல்லபுரத்தை இணைக்கும் சுற்றுவட்ட சாலையினை 6,175 கோடி செலவில் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இந்த சுற்றுவட்ட சாலை எண்ணூர் துறைமுகத்தில் தொடங்கி காட்டுப்பள்ளி, புதுவாயல், பெரியபாளையம், தாமரைப்பாக்கம், திருவள்ளூர், சிங்கபெருமாள் கோவில் வழியே மாமல்லபுரத்திற்கு செல்கிறது. இந்த திட்டத்தின் விண்ணப்பத்தை பரிசீலித்த காஞ்சிபுரம் மாவட்ட கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் சில நிபந்தனைகளோடு திட்டத்தை மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையத்திற்கு கடந்த ஏப்ரல் மாதம் பரிந்துரைத்திருந்தது. அதன்படி, இத்திட்டத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள இடங்களில் இருக்கும் 4797 மரங்களில் 2168 மரங்கள் பாதிக்காதபடியும் 2629 மரங்கள் வேரோடு இடமாற்றம் செய்யப்பட வேண்டும்.

இந்த சாலைக்காக பக்கிங்காம் கால்வாய் மற்றும் கொசஸ்தலையாற்றில் 2.8கி.மீ தூரத்திற்கு அமையவுள்ள மேம்பாலத்திற்காக போடப்படும் தூண்களால் ஆற்றின் நீரோட்டம் பாதிப்படையக் கூடாது. இந்த சாலைத் திட்டத்தால் எக்காரணம் கொண்டும் மீனவர்களுக்கு பாதிப்பு வரக் கூடாது. ‎எண்ணூர் பகுதியை சுற்றியுள்ள மீனவ கிராமங்களில் பொதுமக்கள் கருத்து கேட்க வேண்டும்.இந்த கருத்துக்களின் அடிப்படையில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் ஆகிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் இத்திட்டத்தை பரிசீலித்த தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் 14 நிபந்தனைகளுடன் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. அதில் முக்கியமாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெற வேண்டும். புதிதாக அமைக்கப்படும் சாலை குளங்கள், ஏரிகளை பாதிக்கக் கூடாது.கடற்கரை ஒழுங்காற்று மண்டல பகுதிகளில் நிலத்தடி நீர் எடுக்கக் கூடாது. மீனவ மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

* எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை அமைய உள்ள சாலையின் மொத்த நீளம் 133 கிலோமீட்டர். இதில் 97 கி.மீ தூரத்திற்கு புதிய சாலையும், 35 கி.மீ தூரத்திற்கு ஏற்கனவே இருக்கும் சாலையும் மேம்படுத்தப்படுகிறது.
* இந்த புதிய சாலையில் 5 பெரிய பாலங்கள், 20 சிறிய பாலங்கள், 324 தரைப்பாலங்கள், 49 சுரங்க வழிகள், 4 மேம்பாலங்கள், 3 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படவுள்ளது.
* 81 கிராமங்கள் வழியே பயணிக்கும் இந்த புதிய சாலை 77 கி.மீ தூரத்திற்கு விவசாய நிலங்கள் வழியாகவும், 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வனப்பகுதி வழியாகவும் செல்கிறது.
* காஞ்சிபுரம் மாவட்டத்தின் கொண்டமங்கலம், செங்குன்றம் ஆகிய இடங்களில் 25 ஏக்கர் வனப்பகுதி பயன்படுத்தப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்