SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏரி, கால்வாய்களில் தூர்வாரும் பணியில் முறைகேடு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விசாரிக்க உத்தரவு

2018-10-14@ 02:01:56

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஒதுக்கப்பட்ட நிதியை கொண்டு கால்வாய், குளங்களை தூர்வாராமல் முறைகேடு நடப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வந்த புகாரை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஓரிரு நாளில் தொடங்கவுள்ளது. இதையொட்டி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில் உள்ள அடையாறு, பக்கிங்காம், கொசஸ்தலையாறு, ஆரணியாறு உள்ளிட்ட கால்வாய்களை தூர்வாரும் பணியை செப்டம்பர் மாதமே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் பருவமழை தொடங்கிய பிறகு தான் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்தாண்டு இது போன்ற பிரச்சனை ஏற்படாமல் இருக்க ஆகஸ்ட் முதல் வாரத்தில் 8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியை கொண்டு முறையாக பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். ஆனால், சமீபகாலமாக இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியில் கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது.  

இதே போன்று தான் நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கைக்கான ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை கொண்டு முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக, ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம்-அரும்பாக்கம் கால்வாய், வடக்கு பக்கிங்காம் கால்வாய், மத்திய பக்கிங்காம் கால்வாய், தெற்கு பக்கிங் காம் கால்வாய், கொரட்டூர் உபரி நீர் கால்வாய், வேளச்சேரி ஏரி, வேளச்சேரி ஏரி உபரி நீர் கால்வாய உள்ளிட்ட 37 இடங்களில் கால்வாய் தூர்வாரும் பணியை மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையில், புழல் உபரி நீர் கால்வாய், தெற்கு பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு கால்வாய் பகுதிகளில் முறையாக தூர்வாரப்படவில்லை. ஒரு சில கால்வாய் பகுதிகளில் பாதி அளவில் தூர்வாரும் பணி நடந்த நிலையில் மீது பகுதிகளில் தூர்வாரும் பணியே மேற்கொள்ளப்படவில்லை. இந்த பகுதிகளில் தூர்வாரும் பணியை மேற்கொள்வது குறித்து அதிகாரிகள் போதிய அக்கறை காட்டவில்லை.

இந்த நிலையில், சமீபத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதல்வர் எடப்பாடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அதிகாரிகள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட இடங்களில் புகைப்படம் எடுத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ஏமாற்றும் நோக்கிலும், நற்பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காகவும் இது போன்ற செயல்களில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ஒப்பந்தாரர்கள் கால்வாய்களில் ஜேசிபி இயந்திரங்கள் தூர்வாருவது போன்று படம் எடுக்கின்றனர். ஆனால், அவர்கள் ஒரு சில இடங்களில் மட்டுமே தூர்வாருகின்றனர். 100 சதவீதம் 30 சதவீதத்தில் கூட அவர்கள் செலவு செய்வதில்லை.

இதை கண்டு கொள்ளாமல் இருக்க அதிகாரிகளுக்கும் கமிஷன் தருகின்றனர். இந்தாண்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது போன்று கூடுதல் மழை பொழிவு இருந்தால் சென்னை வெள்ளத்தில் மிதக்கும் சூழல் தான் ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை முறையாக நடைபெறாமல் இருப்பதாக புகார் வந்ததை தொடர்ந்து இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • MadridSantaClausMarathon

  புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்ட கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான் ஓட்டம்: ஸ்பெயினில் நெகிழ்ச்சி!

 • NorthCarolinaStorm

  அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை தாக்கிய பனிப்புயலால் வெந்நிற ஆடை உடுத்தியது போல் காட்சியளிக்கும் நகரங்கள்!

 • kumbamela

  12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

 • hariyanaperison

  ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

 • Guatemalachrismas

  கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக, கவுதமாலாவில் பேய் பொம்மைகளை தீ வைத்து கொளுத்தும் பாரம்பரிய திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்