SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வக்கீல்கள் தினமும் கற்பதை வழக்கமாக்க வேண்டும் தமிழகத்தில் அதிகரித்து வரும் ஒயிட் காலர் குற்றங்கள்: அரசு வக்கீல்கள் பயிற்சி முகாமில் நீதிபதி பேச்சு

2018-10-14@ 02:01:13

சென்னை: தமிழகத்தில் தற்போது ஒயிட் காலர் குற்றங்கள்தான் அதிகம் நடைபெறுகின்றன என்று உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் ஆஜராகும் அரசு குற்றவியல் வக்கீல்களுக்கான பயிற்சி முகாம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. குற்றவியல் துறை இயக்குனரகம் சார்பில் நடந்த இந்த பயிற்சி முகாமை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், டி.எஸ்.சிவஞானம், ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு அறிவுரை வழங்கி பேசினர். நீதிபதி டி.எஸ்.சிவஞானம் பேசும்போது, ‘‘குற்றவியல் வக்கீல்கள் ஒவ்வொருவரும் தினமும் புதிய புதிய விஷயங்களைக் கற்க வேண்டும். ஏதாவது ஒன்றை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் செயல்பட வேண்டும். பெரும்பாலான இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அதிகம் பொருத்தப்பட்டுள்ளதால் குற்றங்களும், சங்கிலி பறிப்புகளும் குறைந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இது வரவேற்கத்தக்க விஷயம்.

ஆனால், குற்றங்கள் தற்போது ஒயிட் காலர் ஜாப்பாக மாறிவிட்டது. தற்போது ஒயிட் காலர் குற்றங்கள்தான் அதிகம் நடைபெறுகிறது. பல்வேறு துறைகளில் இருப்பவர்களும் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். குற்றவியல் நடுவர் மன்ற அரசு வக்கீல்களாக பணியாற்றுபவர்களுக்கு மாவட்ட அமர்வு நீதிமன்ற அரசு வழக்கறிஞர்களாக பதவி உயர்வு வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்’’ என்றார். அமைச்சர் சி.வி.சண்முகம் பேசும்போது, ‘‘குற்றவியல் இயக்ககத்தின் துறையின் செயல்பாடுகளை சீர்படுத்தவும், அரசு குற்றவியல் வக்கீல்களின் தகுதியை மேம்படுத்தவும் குற்றவியல் வக்கீல்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக தமிழக அரசு 7.5 கோடி ஒதுக்கியுள்ளது. 2018 அக்டோபர் முதல் 2019 மார்ச் வரை பல்வேறு பிரிவுகளாக பிரித்து இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. முழுக்க முழுக்க அரசு நிதியில் இருந்து தான் இந்த பயிற்சிக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மானிய குழுவால் தமிழக அரசுக்கு எந்த பயனும் ஏற்படுவில்லை. தற்போது 70 நீதிமன்றங்கள் சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகின்றன. ஓரிரு ஆண்டுகளில் 100 சதவீத நீதிமன்றங்கள் சொந்த கட்டிடங்களில் இயக்கும். நீதித்துறை சிறப்பாக செயல்ப்பட நீதித்துறை பரிந்துரைத்த அனைத்து பணிகளையும் விரைந்து தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. நீதித்துறையில் காலியாக உள்ள சுமார் 3 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 2018ம் ஆண்டு 42 சதவீத குற்ற வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இதில் 44 சதவீத வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • MadridSantaClausMarathon

  புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்ட கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான் ஓட்டம்: ஸ்பெயினில் நெகிழ்ச்சி!

 • NorthCarolinaStorm

  அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை தாக்கிய பனிப்புயலால் வெந்நிற ஆடை உடுத்தியது போல் காட்சியளிக்கும் நகரங்கள்!

 • kumbamela

  12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

 • hariyanaperison

  ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

 • Guatemalachrismas

  கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக, கவுதமாலாவில் பேய் பொம்மைகளை தீ வைத்து கொளுத்தும் பாரம்பரிய திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்