SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேலூர் மத்திய சிறையில் கண்காணிப்பு கோபுரத்துக்கு கீழ் பதுக்கிய செல்போன் சிக்கியது: சிறை காவலர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

2018-10-14@ 01:58:48

வேலூர்: வேலூர் மத்திய சிறையில், கடந்த 7ம் தேதி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சென்னை மாம்பாலத்தை சேர்ந்த இக்பால் மஞ்சூரி செல்போன் பேசிக்கொண்டிருந்தபோது பிடிபட்டார். இதுகுறித்து  புகாரின்பேரில் பாகாயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். செல்போன் பறிமுதல் தொடர்பாக முதன்மை தலைமை காவலர் உட்பட 2 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிறை காவலர்கள் நேற்று முன்தினம் மாலை திடீர் சோதனை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது 2வது கண்காணிப்பு கோபுரத்தின் கீழ் பகுதியில் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த ஒரு செல்போனை காவலர்கள்  பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிறை முழுவதும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலை 6 மணியளவில் 3வது கண்காணிப்பு கோபுரத்தின் கீழ் பயன்பாடற்ற  கழிவறையின் உள்ளே மேலும் ஒரு செல்போன் சிக்கியது. தொடர்ந்து சிறை வளாகம் முழுவதும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சிறை காவலர்களின் கண்காணிப்பு கோபுரத்தின் கீழ் செல்போன்கள் சிக்கியுள்ளதால், கைதிகள் செல்போனில் பேசுவதற்கு போலீசாரே உதவி செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் சிறை காவலர்களிடம், அதிகாரிகள்  கிடுக்கிப்பிடி விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் செல்போன்களின் ஐஎம்இஐ எண்களை வைத்து எந்தெந்த சிம்கார்டுகள் செல்போனில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவத்தால், வேலூர் மத்திய சிறையில் பரபரப்பு  ஏற்பட்டுள்ளது. வேலூர் மத்திய சிறையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-06-2019

    19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்