SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காட்பாடி அருகே திருவிழா நடத்துவதில் ஏற்பட்ட தகராறில் கடந்த 9 ஆண்டுகளாக பூட்டப்பட்டு கிடந்த கோயில் திறப்பு: விரைவில் விழா நடத்த ஏற்பாடு

2018-10-14@ 01:58:46

கே.வி.குப்பம்: காட்பாடி அருகே திருவிழா நடத்துவதில் ஏற்பட்ட தகராறில் மூடப்பட்ட கோயிலை ஐகோர்ட் உத்தரவின்படி வருவாய்த்துறையினர் நேற்று முன்தினம் திறந்தனர். விரைவில் திருவிழா நடத்த ஏற்பாடு  செய்யப்பட்டு வருகிறது.வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே லத்தேரி அடுத்த காளாம்பட்டு கிராமத்தில் சுமார் 50 ஆண்டு பழமையான காளியம்மன் கோயில் உள்ளது. இங்கு மோட்டூர்  உட்பட 7 கிராமங்களை சேர்ந்தவர்கள், 20ஆண்டாக நவராத்திரி  விழாவை கொண்டாடி வந்தனர்.  கடந்த 2010ல் கிராமத்தில் இருந்து சற்றுதொலைவில் புதிய காளியம்மன் கோயில் கட்டப்பட்டது. இதையடுத்து நவராத்திரி விழாவை எந்த கோயிலில் நடத்துவது என்பதில் இருபிரிவினரிடையே  மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து, 2 கோயில்களும் மூடப்பட்டது. இதற்கிடையே, கடந்த 3  ஆண்டுகளுக்கு முன்பு திறந்து பின்னர் மீண்டும் மூடப்பட்டது. இந்நிலையில், கடந்த வாரம் ஒரு பிரிவினர் புதிதாக கட்டிய கோயிலில் நவராத்திரி விழாவை கொண்டாட முயன்றனர். இதற்கு மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் விழா நடத்த வேலூர் ஆர்டிஓ மற்றும்  பனமடங்கி போலீசார் தடை விதித்தனர்.  

தொடர்ந்து, வேலூர் சப்-கலெக்டர் மெக்ராஜ் உத்தரவின்பேரில் காட்பாடி தாசில்தார் ஜெயந்தி, துணை தாசில்தார்  கணேசன் மற்றும் வருவாய் துறையினர் கடந்த 9ம் தேதி காளாம்பட்டு கிராமம் புதிய காளியம்மன் கோயிலை  திறக்க வந்தனர்.  அப்போது அங்கு திரண்ட கிராமத்தின் ஒரு பிரிவினர், கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், கோயிலை திறக்கக்கூடாது எனவும் முற்றுகையிட்டனர். இதனால் இருபிரிவினருக்கும் வாக்குவாதம்  ஏற்பட்டது. இதன்பின் கடந்த 10ம் தேதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கை விசாரித்த நீதிபதி, விழாக்காலம் என்பதால் தற்காலிகமாக இந்த திருவிழாவை அரசே முன்னின்று நடத்தவும், கோயிலை திறந்து வரும் 19ம் தேதி வரை 10 நாட்கள்  பூஜைகள் செய்து விழா நடத்தவும் உத்தரவிட்டது. தொடர்ந்து, தாசில்தார் ஜெயந்தி, துணை தாசில்தார் கணேசன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு கிராம மக்கள் மற்றும் இருதரப்பினர் முன்னிலையில் காளியம்மன் கோயிலை  திறந்தனர். இதனை சப்-கலெக்டர் மெகராஜ் வந்து ஆய்வு செய்தார். லத்தேரி, பனமடங்கி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, காளியம்மன் கோயிலை திறக்காததால் பக்தர்கள் ஜன்னல் வழியாக உள்ளே வீசிய காணிக்கை ரூபாய் நோட்டுக்கள், சில்லரை காசுகள், அம்மனுக்கு சாத்துபடி செய்வதற்கான புதிய புடவை, ரவிக்கைகள் கோயில்  பிரகாரத்தில் சிதறிக்கிடந்தது. அவற்றை வருவாய்த்துறையினர் சேகரித்து கோயிலுக்குள் வைத்தனர். மேலும், நேற்று மதியம் 3 மணி முதல் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து திருவிழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ChennaiMarinaMaasiMagam

  மாசி மகத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் புகைப்படங்கள்

 • AlbinoTurtleheart

  உடலின் வெளிப்புறத்தில் இதயத்துடன் பிறந்துள்ள அபூர்வ வெள்ளை ஆமை: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

 • ModiSalmanDelhi

  சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்

 • SuperSnowMoon2k19

  அதிக ஒளியுடனும், பூமிக்கு மிக அருகிலும் தெரிந்த சூப்பர் மூன்: ரம்மியமான அரிய நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்!

 • 20-02-2019

  20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்