SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சட்டசபை கூட்ட தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டப்பணிகளுக்கு டிசம்பருக்குள் டெண்டர் விட்டிருக்க வேண்டும்

2018-10-14@ 01:58:25

சென்னை:சட்டசபை கூட்ட தொடரில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்ட பணிகளுக்கு டிசம்பர் மாதம் இறுதிக்குள் டெண்டர் விட்டிருக்க வேண்டும் என்று முதன்மை தலைமை பொறியாளர் அறிவுரை வழங்கியுள்ளார். தமிழக பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு மூலம் வருவாய், பதிவு, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளுக்கான புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. மேலும், அந்த கட்டிடங்களின் பராமரிப்பு பணிகளும் இந்த துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை, திருச்சி, மதுரை மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தலைமை பொறியாளர்களின் கண்காணிப்பின் கீழ் இப்பணிகள் நடக்கிறது. இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் ₹2 ஆயிம் கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிதியை கொண்டு உடனடியாக பணிகளை தொடங்காமல் திட்ட பணிகளுக்கு இடம் கிடைக்கவில்லை, திட்ட அறிக்கை தயாரிப்பதில் சுணக்கம், டெண்டர் விடுவதில் தாமதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பல்வேறு திட்ட பணிகள் உடனடியாக தொடங்காமல் தாமதம் ெசய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சட்டசபை கூட்ட தொடரில் அறிவிக்கப்பட்ட திட்ட பணிகளை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வருமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொதுப்பணித்துறை தலைமைக்கு உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் மனோகரன் பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழக அரசால் தற்போது பல்வேறு திட்ட பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு உடனடியாக டெண்டர் விட இந்த ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. தற்போது சட்டசபை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்ட திட்ட பணிகளுக்கு டிசம்பருக்குள் டெண்டர் விட்டிருக்க வேண்டும். வரும் மார்ச் மாதத்திற்குள் அனைத்து பணிகளையும் தொடங்கியிருக்க வேண்டும் என்று பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kumbamela

    12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

  • hariyanaperison

    ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

  • Guatemalachrismas

    கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக, கவுதமாலாவில் பேய் பொம்மைகளை தீ வைத்து கொளுத்தும் பாரம்பரிய திருவிழா

  • protestfrance

    எரிபொருள் உயர்வை கண்டித்து பிரான்சில் தீவிரமடைந்த போராட்டம்: 1,700 பேர் கைது!

  • ItalyConcertStampede

    இத்தாலி இரவு விடுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்