SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழக பொதுப்பணித்துறையில் உரிமம் புதுப்பிக்க 20 ஆயிரம் கான்ட்ராக்டர்களிடம் தலா 15 ஆயிரம் லஞ்சம் வசூல்?

2018-10-14@ 01:54:07

சென்னை: தமிழக பொதுப்பணித்துறையில் 20 ஆயிரம் கான்ட்ராக்டர்களின் உரிமத்தை புதுப்பிக்க தலா ஒருவருக்கு 15 ஆயிரம் வரை லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பொதுப்பணித்துறை கட்டுமானம் மற்றும் நீர்வளப்பிரிவு பணிகளை மேற்கொள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கான்ட்ராக்டர்கள் உள்ளனர். தற்போது புதிய கான்ட்ராக்டர் உரிமம் தருவது, கான்ட்ராக்டர் உரிமத்தை புதுப்பிக்க வேண்டுமென்றால் முதன்மை தலைமை பொறியாளரிடமாக தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கான்ட்ராக்டர்கள் 20 ஆயிரம் பேரும் தங்களது உரிமத்தை புதுப்பிக்க முதன்மை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளனர்.

அவ்வாறு விண்ணப்பித்த கான்ட்ராக்டர்களிடம் தலா ஒருவருக்கு 15 ஆயிரம் வரை லஞ்சம் பெறுவதாக, அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறும் போது, கான்ட்ராக்டர்களின் உரிமம் புதுப்பிக்கும் அதிகாரம் முதன்மை தலைமை பொறியாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது குமரியில் உள்ள ஒரு கான்ட்ராக்டர் உரிமம் புதுப்பிக்க வேண்டுமென்றால் சென்னைக்கு வர வேண்டும். அவ்வாறு பல கி.மீ தூரத்தில் இருந்து வரும் கான்ட்ராக்டர்களிடம் 15 ஆயிரம் கொடுத்தால் தான் உரிமம் புதுப்பிக்கப்படும் என்று தெரிவிக்கின்றனர்.’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்