SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளர்கள் வசூல் வேட்டை

2018-10-14@ 01:53:18

சென்னை: சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் ஒப்பந்த பணியாளர்கள் வசூல் வேட்டையில் ஈடுபடுவது தொடர்கதையாக உள்ளது.தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் காவலாளி, மருத்துவமனை உதவியாளர் ஆகிய பணிகள் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஒப்பந்த பணியாளர்கள் மருத்துவமனைக்கு வருபவர்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபடுகின்றனர். ஆண் குழந்தை  பிறந்தால் ₹4 ஆயிரம், பெண் குழந்தை பிறந்தால் 2 ஆயிரம் வழங்க வேண்டும். பணம் தர மறுக்கும் நோயாளிகளுக்கு, ஸ்ட்ரெச்சர் வழங்கப்படுவதில்லை.இந்த வசூல்வேட்டை தொடர்பாக, அவ்வப்போது பொதுமக்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்த பணியாளர்கள் மருத்துவமனை நிர்வாகித்தின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் வராததால் இவர்களை பணியிடை நீக்கம் செய்யவோ, துறைரீதியான நடவடிக்கை எடுக்கவோ முடியாத நிலை உள்ளது. இதனால் குறிப்பிட்ட ஒப்பந்த நிறுவனத்துக்கு, குறிப்பிட்ட நபரை மீண்டும் பணிக்கு அனுப்ப வேண்டாம் என்று தெரிவிக்கின்றனர். குறிப்பிட்ட நிறுவனம் அதே ஒப்பந்த பணியாளரை வேறு மருத்துவமனைக்கு பணிக்கு அனுப்புகிறது. இதனால் அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த பணியாளர்களின் வசூல் வேட்டை தொடர்கதையாக உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்