SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மயக்க மாத்திரை, கரண்ட் ஷாக் கொடுத்து கணவர் கொலை செப்டிக் டேங்க்கில் புதைத்த மனைவி 11 ஆண்டுக்குப்பின் கைது

2018-10-14@ 01:53:02

தக்கலை: குமரி மாவட்டம் தக்கலை அடுத்த பேராணிவிளையை சேர்ந்தவர் ராஜசேகர். கொத்தனார். இவரது மனைவி சுதா (36). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். ராஜசேகர் கடந்த 2007ல் இருந்து காணவில்லை. இதுபற்றி  சுதாவின் சகோதரர் ரவி, தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். ஆனால் 10 ஆண்டுகளாக முன்னேற்றம் ஏற்படவில்லை.இந்தநிலையில், சுதா ஜாலியாக சுற்றி திரிந்தார். இதனால் சுதா மீது அவரது சகோதரர் ரவிக்கு சந்தேகம் வந்து, உனது கணவர் ராஜசேகர் எங்கே? எனக்கேட்டு தகராறு ெசய்துள்ளார்.  இதையடுத்து `ராஜசேகர் மாயமானது குறித்து  சுதாவிடம் கேட்டு தொந்தரவு செய்தால் தீர்த்து கட்டி விடுவோம்’ என்று ரவியை சுதாவின் கள்ளக்காதலன் ஆன்லின் ஷிபு தலைமையிலான கும்பல்  கடத்திச் சென்று எச்சரித்துள்ளது.இதுபற்றி ரவி, தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இதையடுத்து, வழக்கை தீவிரப்படுத்தியதில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து ராஜசேகரை கொன்று சுதா புதைத்து தெரியவந்தது. இதன்பின், கடந்த பிப்ரவரி 17ம் தேதி  தக்கலை போலீசார் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில், ராஜசேகரின் வீட்டின் செப்டிக் டேங்க்கில் எலும்பு கூடுகளை மீட்டனர். இறந்தது ராஜசேகர்தானா என்பதை உறுதிப்படுத்துவதற்கு பெங்களூரில் உள்ள தடயவியல்  பரிசோதனைக்கு எலும்பு கூடுகள் அனுப்பி வைக்கப்பட்டன.  பல்வேறு கட்ட பரிசோதனைகளின் அடிப்படையில், இறந்தது ராஜசேகர்தான் என்பது உறுதியானது. இதையடுத்து, ராஜசேகர் மாயம் என இருந்த வழக்கு, 11  ஆண்டுகளுக்கு பின் கொலை வழக்காக மாற்றப்பட்டு, அவரது மனைவி சுதாவை நேற்று கைது செய்தனர்.

கொலை குறித்து சுதா அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:நானும், ராஜசேகரும் கடந்த 2002ல் திருமணம் செய்தோம். அவரின் நண்பர்களான ஆல்வின், ஆன்லின் ஷிபு ஆகியோர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார்கள். அப்போது இருவருடனும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில்  ஆல்வினுக்கு வேறு இடத்தில் பெண் பார்த்தனர். நான் இதுகுறித்து கேட்டபோது, `நீ ஆன்லின் ஷிபுவுடன் இருந்து கொள்’ என்றார். உடனே, நான், `கணவர் உயிருடன் இருக்கும்போது வேறு ஒருவருடன் எப்படி வாழ முடியும்’  என்று கேட்டேன். இதற்கு ஆல்வின் 3 தூக்க மாத்திரைகளை கொடுத்து கணவரை கொன்று விடு என்றார். பின்னர் ஆல்வின் வெளிநாடு சென்றுவிட்டார். நான் ஆல்வின் ஷிபுவுடன் நெருக்கமாக இருந்தேன். ஒரு நாள் ராஜசேகர் நேரில் பார்த்து  எங்களை கண்டித்தார். இதனால் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தோம். அதன்படி 9.2.2007ம் தேதியன்று  மதுவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தோம். மயக்கம் அடைந்த அவரை கரண்ட் ஷாக் கொடுத்து கொல்ல  முயன்றோம். அதிலும் அவர் சாகவில்லை. இதையடுத்து முகத்தை அரிவாளால் வெட்டியதுடன், தலையணையால் அமுக்கி கொன்றோம். பின்னர் வீட்டின் செப்டிக் டேங்க்கில் புதைத்தோம்.  இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியதாக  போலீசார் தெரிவித்தனர். இந்த கொலை வழக்கில் ஆன்லின் ஷிபு தவிர வேறு சிலரையும் போலீசார் தேடி வருகிறார்கள்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-06-2019

  19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • bji

  முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

 • suvami

  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

 • mango

  கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

 • earth

  சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்