SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேனி மாவட்டம் முழுவதும் ஓபிஎஸ் ஆதரவாளர் ஒட்டிய எடப்பாடி பேரவை போஸ்டர்: அதிமுக கோஷ்டி மோதல் உச்சக்கட்டம்

2018-10-14@ 01:53:02

கம்பம்: ‘எடப்பாடியார் பேரவை’ என்ற பெயரில் ஓபிஎஸ் ஆதரவாளரான அதிமுக மாவட்ட பிரதிநிதி, தேனி மாவட்டம் முழுவதும் ஒட்டியுள்ள போஸ்டரால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் தேனி மாவட்டத்தில் அதிமுக நிர்வாகிகளுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டபோது, இபிஎஸ் ஆதரவாளரான கம்பம் எம்எல்ஏ ஜக்கையன் கொடுத்த பட்டியலில் உள்ள ஒருவருக்கும் பொறுப்பு வழங்கப்படவில்லை. ஓபிஎஸ் தர்மயுத்தம்  நடத்தியபோது அவருக்கு தரவு தெரிவித்தவர்களுக்கும், ஓபிஎஸ்சின் உறவினர்களுக்கும் அதிமுகவில் பொறுப்பு வழங்கப்பட்டதால், இபிஎஸ் மற்றும் மூத்த நிர்வாகிகள் பலர் மாவட்ட செயலாளர் சையதுகான் மீது கடும்  அதிருப்தியில் உள்ளனர். இதற்கிடையில் டி.டி.வி.தினகரனை ரகசியமாக ஓபிஎஸ் சந்தித்த விவகாரம் அரசியலில் தற்போது சூடு பிடித்துள்ளது. இதனால் இபிஎஸ் ஆதரவாளரான எம்எல்ஏ ஜக்கையன்,  மாவட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்ற நிகழ்ச்சிகளில்  கலந்து கொள்ளாமல் தொடர்ந்து புறக்கணித்தார். மேலும் ஜக்கையன் மகன் பாலமணிமார்பன் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில், ‘தமிழகத்தின் நிரந்தர முதல்வரே’ என இபிஎஸ்சை வாழ்த்தி பேனர் வைத்தார். இதனால் ஜக்கையனுக்கும், ஓபிஎஸ்சுக்குமான பனிப்போர்  உச்சக்கட்டத்தை எட்டியது. இந்நிலையில், கம்பம் அருகே கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளரான மாவட்ட பிரதிநிதி பால்பாண்டியன் பெயரில் தேனி மாவட்டம் முழுவதும், இபிஎஸ்சை வாழ்த்தி ஒட்டியுள்ள  போஸ்டர் அதிமுக வட்டாரத்தையே பரபரப்புக்குள்ளாகி உள்ளது.

அந்த போஸ்டரில், ‘‘தேனி மாவட்ட எடப்பாடியார் பேரவை’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.  ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளர், ஓபிஎஸ்சின் சொந்த ஊரான பெரியகுளம் உள்பட மாவட்டம் முழுவதும் இப்படி போஸ்டர் ஒட்டியுள்ளது,  தேனி மாவட்ட அதிமுகவில் உச்சக்கட்ட புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் மாவட்டத்தில் ஓபிஎஸ்சுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருவதையும் வெளிப்படுத்தியுள்ளது. பால்பாண்டியன் ஓபிஎஸ்க்கு மிகவும் நெருக்கமான  முன்னாள் மாவட்ட செயலாளர் சிவக்குமாரின் நெருங்கிய உறவினர், ஓபிஎஸ் விழாக்களில் தவறாமல் பங்கேற்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ll112345

    102 வயதான மூதாட்டி ஸ்கை டைவிங் செய்து புதிய உலக சாதனை!

  • rajini_birthdy

    நடிகர் ரஜினிகாந்தின் 69 வது பிறந்த நாள் ஸ்பெஷல்: ரஜினிகாந்த் அரிய புகைப்படங்கள்!

  • snowfall_kedarnth

    கேதார்நாத்தில் கடும் பனி பொழிவு: உறைபனியில் மூடப்பட்ட கேதார்நாத் கோயில்

  • mukesamba_daugfes

    முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமால் திருமண ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி!

  • glassroof_simla

    இயற்கை காட்சிகளை உள்ளிருந்து ரசிக்க வைக்கும் வகையில் ஷிம்லா-கல்கா வரை கண்ணாடி மேற்கூரை கொண்ட ரயில்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்