SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெல்லை டாக்டருக்கு பன்றிக்காய்ச்சல்

2018-10-14@ 01:53:01

நெல்லை:  பாளையங்கோட்டை யைச் ரஹ்மத் நகரைச் சேர்ந்த டாக்டர் கல்யாண்குமார் (45). நெல்லை அரசு மருத்துவமனையில் தோல் நோய் பிரிவில் பணியாற்றுகிறார். இவருக்கு கடந்த 4 தினங்களுக்கு முன்  தொடர்ந்து காய்ச்சல் இருந்தது. மேலும் இருமல், உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தன. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. ரத்தப் பரிசோதனையில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருப்பதை டாக்டர்கள் உறுதி  செய்தனர். இதனையடுத்து உடனடியாக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் தனிவார்டில் சேர்த்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது மனைவி கோகிலா  உள்ளிட்ட உறவினர்கள் 3 பேரையும் தனி வார்டில் சேர்த்து பரிசோதித்து வருகின்றனர். அவரது மனைவியும் நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றுகிறார்.பன்றிகாய்ச்சல் காற்றின் மூலம் பரவும் என்பதால் அதிக பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் திருச்சி மாவட்டம் கரூரை சேர்ந்த விவசாயி ரவிச்சந்திரனும் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்