SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்சியில் விமான நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு ரன்வேயின் நீளம் குறைவுதான் விபத்துக்கு காரணமா?

2018-10-14@ 01:53:01

திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 11ம் தேதி இரவு 1 மணிக்கு துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 136 பயணிகளுடன் புறப்பட்டது. அப்போது விமானத்தின் அடிப்பகுதி, காம்பவுண்டு  சுவருக்கு முன்னதாக 7 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த டவரில் உரசியது. பின்னர் விமானத்தின் 2 பின் சக்கரங்களும் 9 அடி உயர காம்பவுண்ட் சுவரில் மோதியது.  விமானம் உரசியதில், ரன்வேயில் உள்ள பாதையை  அடையாளம் காட்டும் விளக்குகள், லோக்கலைசர் எனப்படும் வழிகாட்ட உதவும் ஆன்டனாக்கள்(டவர்) 5, அவற்ைற கட்டுப்படுத்தும் கருவி 1 ஆகியவை சேதமடைந்தன. இதுதவிர, விமானத்தின் அடிப்பகுதியில் நீளமான ஓட்டை  விழுந்தது. இந்த சேதத்துடன் மஸ்கட்டில் பறந்தபோது, பைலட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மும்பையில் தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில், ஏர் இந்தியா நிறுவனம் விசாரணை நடத்தி, பைலட்கள் கணேஷ்பாபு, அனுராக்  ஆகிய இருவரையும் தற்காலிக பணி நீக்கம் செய்தது.  

இதனிடையே, விபத்துக்கு ஓடுதள நீளம் குறைவே என்று  புகார் எழுந்துள்ளது. இதன்பின், விபத்துக்கு காரணம் குறித்து அறிய விமான நிலைய ஆணைய குழும உயர் அதிகாரி ராவ் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவினர்  நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு திருச்சிக்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது, ரன்வேயின் நீளம் குறைவா, எத்தனை அடி நீளம் உள்ளது என்று விசாரித்தனர். அப்போது திருச்சி அதிகாரிகள், `விமான நிலையத்தின் ரன்வே 8136 அடி நீளம். ஏர் பஸ் ஏ 320, ஏர்பஸ் ஏ 321, போயிங் 737 போன்ற ரக விமானங்கள் மட்டுமே இங்கிருந்து இயக்கபடுகின்றன. பெரிய ரக மற்றும் சரக்கு  விமானங்களை இயக்கும் வகையில் ரன்வேயை 12,500 அடியாக அதிகரிக்க விமான நிலைய ஆணைய குழுமம் திட்டமிட்டுள்ளோம். இதற்காக விமான நிலையத்தை ஒட்டிய 168 ஏக்கர் ராணுவ நிலம், 40 ஏக்கர் புறம்போக்கு நிலம்,  510 ஏக்கர் விளை நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்’ என்று விளக்கினார்கள்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • MadridSantaClausMarathon

  புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்ட கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான் ஓட்டம்: ஸ்பெயினில் நெகிழ்ச்சி!

 • NorthCarolinaStorm

  அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை தாக்கிய பனிப்புயலால் வெந்நிற ஆடை உடுத்தியது போல் காட்சியளிக்கும் நகரங்கள்!

 • kumbamela

  12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

 • hariyanaperison

  ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

 • Guatemalachrismas

  கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக, கவுதமாலாவில் பேய் பொம்மைகளை தீ வைத்து கொளுத்தும் பாரம்பரிய திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்