SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கவர்னர் மாளிகை மீது நாராயணசாமி புகார் 85 லட்சம் வசூலித்து முறைகேடு

2018-10-14@ 01:53:00

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நிருபர்களை நேற்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மத்திய அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களிலிருந்து புதுச்சேரி வளர்ச்சிக்காக சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் (சி.எஸ்.ஆர்.) கீழ் நிதி பெறுவதற்கு அரசின் சார்பில் சி.எஸ்.ஆர். குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின்  தலைவராக நான் (முதல்வர்) உள்ளேன். புதுச்சேரி மாநிலத்தில் அரசு துறைகளுக்கு தேவையான இயந்திரங்கள் வாங்குவதற்கும், பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம், கழிப்பறைகள் கட்டுவதற்கும் பல தொண்டு நிறுவனங்களும், வங்கிகளும் முன்வந்து நிதி வழங்கி  இருக்கிறார்கள். சி.எஸ்.ஆர். கமிட்டி மூலமாக அந்த நிதியை பெற்று அந்தந்துறைகளின் திட்டங்களுக்காக நிதிகளை வழங்கி வருகிறோம். 2 நாட்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் சம்மந்தமாக மருத்துவத்துறையில் இயந்திரம் வாங்குவதற்கு  இந்தியன் வங்கி அதிகாரிகள் ₹13.50 லட்சம் காசோலையை வழங்கினார்கள். இப்படி பல நிறுவனங்களிலிருந்து நிதி பெறப்பட்டு முறையாக, வெளிப்படையாக செலவு செய்யப்படுகிறது. சி.எஸ்.ஆர். நிதி சம்மந்தமாக தலைவர், அதற்கான விதிமுறைகள் இருக்கும்போது கவர்னர் அலுவலகத்திலிருந்து பல நிறுவனங்கள், ரோட்டரி கிளப்புகளை நேரடியாக தொடர்பு கொண்டு சி.எஸ்.ஆர். நிதி கேட்டு பணம் வசூல்  செய்யப்பட்டுள்ளது. எனக்கு கிடைத்த தகவல்படி இதுவரை ₹85 லட்சம் வசூல் செய்திருக்கிறார்கள். அந்த நிதி யார், யாரிடமிருந்து வசூல் செய்யப்பட்டது என்ற விவரம் இதுவரை யாருக்கும் கொடுக்கப்படவில்லை. கவர்னர், அந்த  நிதியை சி.எஸ்.ஆர். கமிட்டிக்கு அனுப்ப வேண்டுமே தவிர, கவர்னர் மாளிகை செலவு செய்ய அதிகாரம் கிடையாது.

 கவர்னர் அலுவலகத்தின் பெயரை சொல்லி பலர் சி.எஸ்.ஆர். நிதியை வசூல் செய்திருக்கிறார்கள். இது அதிகார துஷ்பிரயோகம். கவர்னர் அலுவலகமே ஊழலுக்கு உடந்தையாக இருக்கிறது. குறிப்பாக, கவர்னர் அலுவலகத்தில்  பணிபுரிபவர்கள் தங்களுடைய சொந்த நலனுக்காக சி.எஸ்.ஆர். என்ற பெயரில் பணத்தை வசூல் செய்து பயன்படுத்தி கொள்கிறார்கள்.  பலர் என்னிடம் நேரடியாக வந்து, கவர்னர் மாளிகை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சி.எஸ்.ஆர். நிதி கேட்டு தொந்தரவு கொடுப்பதாக புகார் அளிக்கின்றனர். எனவே, இதற்கு கவர்னர் பொறுப்பு ஏற்க வேண்டும். இவ்வாறு முதல்வர் நாராயணசாமி கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ChennaiMarinaMaasiMagam

    மாசி மகத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் புகைப்படங்கள்

  • AlbinoTurtleheart

    உடலின் வெளிப்புறத்தில் இதயத்துடன் பிறந்துள்ள அபூர்வ வெள்ளை ஆமை: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

  • ModiSalmanDelhi

    சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்

  • SuperSnowMoon2k19

    அதிக ஒளியுடனும், பூமிக்கு மிக அருகிலும் தெரிந்த சூப்பர் மூன்: ரம்மியமான அரிய நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்!

  • 20-02-2019

    20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்