அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சால் பரபரப்பு அதிமுகவுக்கு பெண் ஒருவர் தலைமை ஏற்கும் காலம் வரும்
2018-10-14@ 01:52:59

மதுரை: அதிமுகவுக்கு பெண் தலைமை ஏற்கும் காலம் வரும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெயலலிதா பேரவை சார்பில் அதிமுக அரசின் சாதனை விளக்க பெண்கள் சைக்கிள் பேரணி, மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் வரும் 24ம் தேதி நடக்க உள்ளது. இதில் பங்கேற்கும் பெண்களுக்கான பயிற்சி முகாம், மதுரை ரிங்ரோட்டிலுள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. முகாமுக்கு பேரவை மாநில செயலாளரும், அமைச்சருமான உதயகுமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வளர்மதி, ராஜலட்சுமி, முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, வளர்மதி, மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்எல்ஏ, விஜிலா சத்தியானந்த் எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் மாணிக்கம், பெரியபுள்ளான், சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும்போது, ‘‘ஜெயலலிதாவுக்கு பிறகு இந்த கட்சியையும், ஆட்சியையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழி நடத்துகின்றனர். இந்த நல்லாட்சி தொடர வேண்டும். பெண்களுக்கு தனி சிறப்பு உண்டு. ஆண்கள் வீட்டு வாசல் வரை தான் செல்லமுடியும். பெண்கள் வீட்டின் அந்தரங்க அறை, சமையல் அறை வரை செல்ல முடியும். இந்த இயக்கத்திற்கு பெண்களில் ஒருவர் தலைமை ஏற்கும் காலம் வரும்’’ என்றார்.அமைச்சரின் பேச்சை கேட்டதும் மேடையில் அமர்ந்திருந்த அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் திகைத்தனர். ஏற்கனவே டி.டி.வி.தினகரன் அமைச்சர்களில் சிலர் ஸ்லீப்பர் செல்களாக உள்ளனர் என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் ‘பெண் தலைமை ஏற்பார்’ என அமைச்சர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகள்
ஆட்சியை காப்பாற்றவே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது அதிமுக: ஸ்டாலின் சாடல்
அதிமுக - பாஜக கூட்டணியில் தேமுதிக உள்ளிட்ட பல கட்சிகள் சேர வாய்ப்புள்ளது: பொன் ராதாகிருஷ்ணன்
காங்கிரஸ் தொகுதி இன்று தெரியும்: கே.எஸ்.அழகிரி பேட்டி
தனித்து நிற்காமல் திமுக-அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டி: பாமக வெற்றி பெற்றது எப்போது?
அதிமுக அணியில் பாஜவை சேர்த்ததற்கு அதிமுக கூட்டணி எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு: ஓரிரு நாளில் முக்கிய முடிவை அறிவிக்க போவதாக எச்சரிக்கை
முதல்வர் முன்னிலையில் பரபரப்பு: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திடீர் மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி
மாசி மகத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் புகைப்படங்கள்
உடலின் வெளிப்புறத்தில் இதயத்துடன் பிறந்துள்ள அபூர்வ வெள்ளை ஆமை: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!
சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்
அதிக ஒளியுடனும், பூமிக்கு மிக அருகிலும் தெரிந்த சூப்பர் மூன்: ரம்மியமான அரிய நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்!
20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்