குடும்ப தகராறில் விபரீதம் கத்தியால் குத்தி மனைவி படுகொலை
2018-10-14@ 01:52:57

* தடுத்த மகனுக்கு கத்திக்குத்து
* போலீசில் கணவன் சரண்
வேளச்சேரி: பள்ளிக்கரணை, பாரதிதாசன் நகர், முதல் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (48), தனியார் நிறுவன காவலாளி. இவரது மனைவி ஜோஸ்பின் மேரி என்ற மகாலட்சுமி (42). வீட்டு வேலை செய்து வந்தார். இவர்களது மகன்கள் குணால் (19), திரிஷ் (17). கிருஷ்ணமூர்த்தி நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியிடம் கடும் வாக்குவாதம் செய்துள்ளார். இதன் பின்னர் போதையில் தூங்கியுள்ளார்.நள்ளிரவு 2.30 மணிக்கு எழுந்த கிருஷ்ணமூர்த்தி, சமையல் அறைக்கு சென்று, அங்கிருந்த கத்தியை எடுத்து வந்து, தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் கழுத்தில் சரமாரியாக குத்தி உள்ளார்.
அவரது சத்தம்கேட்டு எழுந்த மகன் திரிஷ் தந்தையை தடுத்துள்ளார். அவரது கையிலும் கத்தியால் குத்திவிட்டு கிருஷ்ணமூர்த்தி தப்பி விட்டார். இதில், ஜோஸ்பின் மேரி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது மகனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கிடையே கிருஷ்ணமூர்த்தி பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் சரணடைந்தார். இதுபற்றி, போலீசார் வழக்குப்பதிவு செய்து சரண் அடைந்த கிருஷ்ணமூர்த்தியிடம் விசாரணை மேற்கொண்டனர். அவரை கைது செய்து, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
நெல்லை அருகே மணல் கடத்தலை தடுத்த போலீஸ் ஏட்டு கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை
வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை வழக்கில் சென்னை யோகா மாஸ்டருக்கு ஆயுள்: திருச்சி மகிளா கோர்ட் தீர்ப்பு
மனைவியை தாக்கியதாக தலைமை காவலர் மீது போலீசில் புகார்
மதுரையில் முகமூடிக்கும்பல் அட்டகாசம் அடகுக்கடையை உடைத்து 1,500 சவரன் கொள்ளை
கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட பொம்மை வியாபாரிக்கு கத்திக்குத்து
கோவை அரசு மருத்துவமனையில் 2 வயது பெண் குழந்தைக்கு எச்ஐவி ரத்தம்: தந்தை பரபரப்பு புகார்
மாசி மகத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் புகைப்படங்கள்
உடலின் வெளிப்புறத்தில் இதயத்துடன் பிறந்துள்ள அபூர்வ வெள்ளை ஆமை: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!
சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்
அதிக ஒளியுடனும், பூமிக்கு மிக அருகிலும் தெரிந்த சூப்பர் மூன்: ரம்மியமான அரிய நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்!
20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்