SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திமுக, காங்., பிரமுகர் உட்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு

2018-10-14@ 01:52:57

சென்னை: சென்னை பெல்ஸ் ரோடு, பாரதி சாலை, ஜங்ஷன் பிளாட்பாரத்தில் உள்ள ஒரு பிரியாணி கடையில் நேற்று முன்தினம் இரவு ஐவுஸ்ஹவுஸ் பகுதியை சேர்ந்த நவாஷ் (36), அதே பகுதியை சேர்ந்த காங்கிரஸ்  பிரமுகர் முகமது தாஜூதீன் அப்பாஸ் ஆகியோர் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ராயப்பேட்டை, ஜவஹர் உசேன்கான் முதல் தெருவை சேர்ந்த 115வது வட்ட திமுக செயலாளர் ரஹமான் செரீப் (54) என்பவரும் அங்கு  நின்றுள்ளார்.அப்போது, அங்கு வந்த மர்மநபர்கள் 5 பேர், திடீரென பிரியாணி கடை உரிமையாளரை வெட்ட முயன்றனர். இதை அங்கு நின்ற 3 பேரும் தடுத்துள்ளனர். இதில், ஆத்திரமடைந்த அவர்கள், 3 பேரையும் சரமாரியா வெட்டிவிட்டு   தப்பினர். படுகாயமடைந்த அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்படுகிறது. இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
* வியாசர்பாடி போக்குவரத்து காவல்  சிறப்பு எஸ்ஐயாக பணிபுரிந்து வரும் நாசர்கான் (54) என்பவரிடம் செல்போனை பறித்துக் கொண்டு தப்பிய வியாசர்பாடி பி கல்யாணபுரத்தை சேர்ந்த ராஜேஷ் (19) என்பவரை போலீசார் கைது  செய்தனர்.
* ஆவடி முத்தாபுதுப்பேட்டை கரிமேடு அண்ணா நகர்  வள்ளலார் தெருவை சேர்ந்த பார்த்திபன் மகள் பவித்ரா (17). பிளஸ் 2 மாணவியான  இவர், சரிவர பள்ளிக்கு செல்லாததால் பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால், நேற்று  முன்தினம் விஷம் குடித்து தற்கொலை  செய்து கொண்டார்.
* புதுக்கோட்டையை சேர்ந்த ராஜேந்திரன்  (52)  நேற்று முன்தினம் மாலை, திருவல்லிக்கேணி  ரயில்  நிலையம் சென்றபோது, 3 பேர்,  அவரை மிரட்டி பணம் பறிக்க  முயன்றனர். அவர் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த  அவர்கள் ராஜேந்திரனை கத்தியால்  வெட்டிவிட்டு தப்பினர். படுகாயமடைந்த அவருக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.  போலீசார் வழக்கு பதிந்து, மகா கிருஷ்ணன், சார்லஸ் மற்றும் வட  மாநிலத்தை  சேர்ந்த பிரதீப் ஆகிய 3 பேரை  கைது செய்தனர்.
* தூத்துக்குடியை சேர்ந்த கதிரவன் (30), ஜமீன் பல்லாவரத்தில் தங்கி ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் திருமணம் நடந்தது. நேற்று காலை  மனைவியை அழைத்துக்கொண்டு திருவான்மியூர் கடற்கரைக்கு சென்றபோது, 2 பேர் கதிரவனை இரும்பால் தாக்கிவிட்டு, அவரது மனைவி கழுத்தில் கிடந்த 12 சவரன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பினர்.
* கொத்தவால்சாவடி காவல் நிலையத்தில்  சிறப்பு எஸ்ஐயாக வேலை பார்க்கும் பெருமாள் (52), பைக்கில் ரோந்து சென்றபோது, ஹெல்மெட்டால் அவரை தாக்கிய பிராட்வே திருவள்ளுவர் நகரை சேர்ந்த லெனின் இமானுவேல்  (26) என்பவரை கைது செய்தனர்.
* கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரில் சக மாணவனை கத்தியால் வெட்ட கத்தியுடன் காத்திருந்த அதே பகுதியை சேர்ந்த மாணவர்கள் ஜெயகிருஷ்ணன்  கிரண் (18). கண்ணாதாசன் நகர் ராகுல் தீபக் (18), மீஞ்சூரை சேர்ந்த  17வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
* வண்ணாரப்பேட்டையில் மாநகர பஸ் கண்ணாடியை உடைத்த தியாகராயா கல்லூரி மகேஷ் (19)  என்பவரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய 6 மாணவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
* கொரட்டூரை  சேர்ந்த சாந்தி (48), நேற்று காலை தனது தாய் பிரேமா (72) என்பவருடன் மொபட்டில் கிண்டி அருகே சென்றபோது, சாலையோர மரம் இவர்கள் மீது சாய்ந்ததில் பிரேமா இறந்தார். சாந்தி படுகாயமடைந்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-02-2019

  24-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-02-2019

  23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • chennai_pkankatchui1

  சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

 • israelmoonshuttle

  சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

 • chennai_laksh1

  திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்