SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

25 ஆண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி எழுதிய பாடலுக்கு பார்வையற்ற மாணவிகள் நடனம்: டிவிட்டரில் வெளியிட்டு வாழ்த்து

2018-10-14@ 01:33:30

புதுடெல்லி: பிரதமர் மோடி 25 ஆண்டுகளுக்கு முன் எழுதிய பாடலுக்கு, குஜராத்தை சேர்ந்த பார்வையற்ற மாணவிகள் கர்பா நடனம் ஆடினர். அந்த வீடியோவை டிவிட்டரில் வெளியிட்டு பிரதமர் மோடி நவராத்திரி  வாழ்த்து தெரிவித்துள்ளார். நவராத்திரி விழா கொண்டாட்டம் குஜராத்தில் நடைபெற்று வருகிறது. உலகின் பல இடங்களில் உள்ள குஜராத் மக்களும் நவராத்திரி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கொண்டாட்டத்தின் போது பெண்கள்  பாரம்பரிய உடை அணிந்து கர்பா நடனம் ஆடி மகிழ்வார்கள். இது பற்றி பிரதமர் மோடி 25 ஆண்டுகளுக்கு முன் குஜராத்தி மொழியில் ஒரு பாடல் எழுதியுள்ளார். அதில், ‘கர்பா நடனம் உலகம் முழுவதையும் இணைக்கிறது.  அளவில்லாத மகிழ்ச்சியை அளிக்கிறது. இயற்கையுடன் இணைய வைக்கிறது. கர்பா குஜராத்தின் வளம், கவுரவமான பாரம்பரியம், அடையாளம். ஏழை, பணக்காரர் அனைவருக்கும் கர்பா மகிழ்ச்சியை கொண்டு வருகிறது. மக்கள் நலத்தின் அடையாளமாக உள்ளது. கர்பா புல்லாங்குழல், மயில் இறகு போன்றது. கர்பா உண்மையானது, தாயின் அழகான குங்குமத்தை போன்றது, கர்பா என்றால் சக்தி, ஈடுபாடு’ என பிரதமர் மோடி எழுதியுள்ளார்.இந்த பாடலுக்கு குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ‘அந்த் கன்யா பிரகாஷ் கிரஹ்’ என்ற பார்வையற்ற பள்ளி மாணவிகள் கர்பா நடனம் ஆடினர். இந்த நடனத்தின் வீடியோவை பிரதமர் மோடி டிவிட்டரில் வெளியிட்டு நவராத்திரி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது பற்றி அவர்  ‘‘இந்த நடனம் எனது மனதை தொட்டுள்ளது. கர்பா கொண்டாட்டத்துக்கு இந்த மகள்கள் உயிர்  கொடுத்துள்ளனர். அனைவருக்கும் நவராத்திரி ஆசிர்வாதம் கிடைத்திருக்கும் என நம்புகிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

  • oaman_thee11

    மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

  • AftermathProtestHK

    ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்