SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ம.பி சட்டப்பேரவை தேர்தல் காங்கிரஸ் கூட்டணி முயற்சி மாநில கட்சிகள் நிராகரிப்பு

2018-10-14@ 01:33:29

போபால்: மத்தியப் பிரதேசத்தில் ஆளும் பாஜ கட்சி 4வது முறையாக ஆட்சியை கைப்பற்ற தீவிர முயற்சி எடுத்து வருகிறது. பா.ஜ.வின் வெற்றியை தடுக்க வேண்டும் என்றால் காங்கிரஸ் வலுவான கூட்டணியை  அமைக்க வேண்டும். கடந்த 2013ம் ஆண்டு தேர்தலில் பாஜ 44.87 சதவீத வாக்குகளை பெற்றது. காங்கிரஸ் 36.38 சதவீத வாக்குகளை பெற்றது. பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, கோந்வானா ஞானதந்திரா கட்சி(ஜிஜிபி) ஆகிய கட்சிகளை  கூட்டணி சேர்த்தால், பா.ஜ.வை வெற்றிக் கொள்ளலாம். இதனால், மாநில கட்சிகளை கூட்டணி சேர்க்கும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியுள்ளது. ஆனால் அந்த கட்சிகள், மத்தியப் பிரதேசத்தின் 230 தொகுதிகளிலும் தனித்து  போட்டியிட விரும்புவதாக தெரிவித்துள்ளன. இதனால் இங்கு பல்முனை போட்டி ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருந்தாலும், கூட்டணி  கட்சிகள் சேராததால், தேர்தல் முடிவு இழுபறி நிலையில் இருக்கும் என கூறப்படுகிறது. சட்டப்பேரவை தேர்தலில் மாநில கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பதில் ஏற்பட்டுள்ள தோல்வி, 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பா.ஜ.வுக்கு எதிரான மெகா கூட்டணி உருவாக்குவதில் பாதிப்பை ஏற்படுத்தாது என காங்கிரஸ்  தலைவர்கள் கூறியுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • MadridSantaClausMarathon

    புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்ட கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான் ஓட்டம்: ஸ்பெயினில் நெகிழ்ச்சி!

  • NorthCarolinaStorm

    அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை தாக்கிய பனிப்புயலால் வெந்நிற ஆடை உடுத்தியது போல் காட்சியளிக்கும் நகரங்கள்!

  • kumbamela

    12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

  • hariyanaperison

    ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

  • Guatemalachrismas

    கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக, கவுதமாலாவில் பேய் பொம்மைகளை தீ வைத்து கொளுத்தும் பாரம்பரிய திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்