SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புகைப்படம் கொடுக்க சென்றபோது பிரெஞ்ச் கிஸ் கொடுத்தார் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது அமெரிக்க பத்திரிகையாளர் பாலியல் புகார்

2018-10-14@ 01:33:27

* பிசிசிஐ சிஇஓ.வும் தப்பவில்லை
விசாரிக்கப்படும் என்கிறார் அமித்ஷா
புதுடெல்லி: மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது ‘மீ டூ’வில் பெண்களால் புகார்கள் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. தற்போது அவர் மீது அமெரிக்காவை சேர்ந்த  பெண் பத்திரிகையாளர் ஒருவர் பாலியல் புகார்  கூறியுள்ளார். இதேபோல் பிசிசிஐ தலைமை நிர்வாக அதிகாரி  ராகுல் ஜோஹ்ரி மீதும் ஒரு பெண் பாலியல் புகார் கூறியுள்ளார்.மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சராக இருப்பவர் எம்.ஜே.அக்பர். இவர் முன்பு பத்திரிகையாளராக பணியாற்றியவர். தற்போது டிவிட்டரில் ‘மீ டூ’ என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், ஆண்களால் பாலியல்  தொந்தரவுகள், பலாத்காரத்துக்கு ஆளானவர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில், பல்வேறு பிரபலங்கள் சிக்கும் நிலையில், அமைச்சர் எம்.ஜே.அக்பரும் சிக்கினார். இதுவரை அவர் மீது 9  பெண்கள் பாலியல் தொந்தரவு புகார் கூறியுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதற்கிடையே தற்போது அமெரிக்காவில் இருந்து ஒரு பெண் பத்திரிகையாளர், எம்.ஜே.அக்பர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணான மஜ்லி டி புய் காம்ப், 2007ல் 18 வயதாக இருந்தபோது, அக்பரால் பாலியல்  தொந்தரவுக்கு ஆளாகி உள்ளார். அப்போது அவர் அக்பர் பணியாற்றிய ஆசிய ஏஜ் செய்தித்தாளில் பணியாற்றி வந்துள்ளார். தனக்கு நேர்ந்த பாதிப்பு குறித்து ‘மீ டூ’ டிவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:நான் நன்றி கூறுவதற்காக என் கையை நீட்டினேன். ஆனால், 55 வயதான அக்பர், 18  வயதான எனது தொண்டைக்குள் அவரது நாக்கை  செலுத்தினார்.

பத்திரிகையில், அடுத்த நாள் முதல் பக்கத்தில் பிரசுரிக்கப்பட வேண்டிய புகைப்படத்தை தேர்ந்தெடுப்பதற்காக, அக்பர் விருப்பத்தை கேட்பதும் எனது  பணியில் ஒன்று. நான் அவரிடம் சென்று புகைப்படங்களை கொடுப்பேன். அவர்  அவைகளை பார்த்து எதையும் சொல்ல மாட்டார்.   ஆனால், அந்த சமயம் அவர் திருப்பி கொடுக்கும் படங்கள் அனைத்தும் மிக அருவெறுப்பாக இருக்கும்.இவ்வாறு அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.18 வயது பெண்ணிடம், 55 வயதான தாத்தா நிலையில் இருந்த எம்.ஜே.அக்பர் செய்த செயலுக்கு தற்போது மீண்டும் கடும் கண்டனங்கள் எழ ஆரம்பித்துள்ளது.இதேபோல், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய  (பிசிசிஐ)  தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஜோஹ்ரி மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது. அடையாளத்தை வெளிபடுத்த விரும்பாத  பெண் பத்திரிகையாளர், ‘‘நாங்கள் இருவரும் வெவ்வேறு ஊடக நிறுவனங்களுக்கு  வேலை செய்தபோது நிகழ்ந்த சம்பவம் அது. இந்த பதவிக்கு முன் தெற்கு ஆசியா  டிஸ்கவரி நெட்வொர்க்கில்  ஆசியா பசிபிக்கிற்கான துணை செயல்பாட்டு தலைவராக ஜோஹ்ரி பணியாற்றினார். அப்போது அவர் என்னிடம்  மோசமாக நடந்துக் கொண்டார்’’ என்று கூறியுள்ளார்.இதற்கு முன் விமானப் பணிப்பெண்  ஒருவர் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அர்ஜுன ரணதுங்க மற்றும் லசித் மலிங்கா ஆகியோர் மீது பாலியல் குற்றம் சுமத்தினார்.மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பாலியல் புகார்கள்  அதிகரித்து வரும் நிலையில், அது குறித்து பரிசீலிக்கப்படும் என பாஜ தலைவர் அமித்ஷா கூறி உள்ளார். அவர் கூறுகையில், ‘‘குற்றச்சாட்டுகளில் உண்மைத்தன்மை சரிபார்க்கப்பட வேண்டும். அது உண்மையா அல்லது தவறா என்பதைக் காண வேண்டும்’’ என கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • CivilAviationJetAirways

  மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

 • RajivAnniversary28

  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

 • ICRA2019

  கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

 • ChongqingCycleRace

  சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

 • BrazilBarMassacre

  பிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்