SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒடிசாவில் டிட்லி புயல் தாக்கியதால் பாதிப்பு நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி: 4 பேர் மாயம்

2018-10-14@ 01:33:25

புவனேஸ்வர்: டிட்லி புயல் தாக்கிய ஒடிசாவில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர், 4 பேரை காணவில்லை.வங்கக் கடலில் உருவான டிட்லி புயல், ஒடிசாவின் கோபால்பூர் பகுதியில் கடந்த 11ம் தேதி கரை கடந்தது. இதனால் ஒடிசாவின் கன்ஜம், கஜபதி, ராயகடா, பூரி, காந்தமால் மற்றும் கேந்திரபாரா ஆகிய மாவட்டங்களில் வெள்ளம்  சூழ்ந்தது. இங்குள்ள ஆறுகளில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி பாய்கிறது. இங்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். புயலால் 60 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  வீடுகளை விட்டு வெளியேறிய 1,27,262 பேர் 963 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், ஒடிசாவில் நேற்று முன்தினம் மாலை கனமழை பெய்தது. இதனால் கஜபதி மாவட்டத்தில் பாராகாரா கிராமத்தை சேர்ந்த மக்கள் குகை போன்ற பகுதியில் தங்கினர்.

அந்த இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில், பலர்  மண்ணில் புதைந்தனர். இடிபாடுகளில் இருந்து இதுவரை 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 4 பேரை காணவில்லை. அவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.  நிலச்சரிவு ஏற்பட்ட இடம் தொலைதூர பகுதி. இங்கு செல்லும் சாலைகளில்  மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. இதனால் மீட்பு பணியை உடனடியாக மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. ஒடிசாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில்  முதல்வர் நவீன் பட்நாயக் ஆய்வு மேற்கொண்டு, நிவாரண பணிகளை துரிதபடுத்தி வருகிறார். புயல் பாதிப்பை முன்னிட்டு ஒடிசாவின் தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களை சேர்ந்த ஊழியர்களின் தசரா விடுமுறை ரத்து  செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்