SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொளத்தூர் தொகுதியில் 71 பேருக்கு நலத்திட்ட உதவி: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

2018-10-14@ 01:33:17

சென்னை: கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 71 பேருக்கு நலத்திட்ட உதவிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நலத்திட்ட உதவிகள் மற்றும் தொகுதி நிதியில் இருந்து அடிக்கல் நாட்டு விழா நேற்று மாலை நடந்தது. கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், திமுக தலைவருமான  மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, பூம்புகார் நகர், சிவசக்தி நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் பணியை தொடங்கி வைத்தார். நேர்மை நகரில் உயர்மின் அழுத்த கேபிளை பூமிக்கடியில் புதைக்கும் பணியை தொடங்கி  வைத்தார்.

ஜிகேஎம் காலனி 39வது தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு சத்துணவு கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, பெரவள்ளூர் ஜவகர் நகரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தொகுதி  மக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்எல்ஏ, எம்எல்ஏக்கள் தாயகம் கவி, ரங்கநாதன், சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், மாவட்ட துணை செயலாளர் தேவஜவகர், பகுதி செயலாளர்கள்  முரளிதரன், நாகராசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-02-2019

    24-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-02-2019

    23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்