SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிபிஐ விசாரணையை எதிர்த்து அப்பீல் அதிமுக கட்டுப்பாட்டில் லஞ்ச ஒழிப்பு துறை இயங்குவதா?: மு.க.ஸ்டாலின் கண்டனம்

2018-10-14@ 00:55:33

சென்னை: முதல்வர் மீதான சிபிஐ விசாரணையை எதிர்த்து லஞ்ச ஊழல் மற்றும் தடுப்புத் துறை அப்பீல் செய்யும் என அதிமுக அமைப்புச் செயலாளர் கூறியதன் மூலம் அதிமுக கட்டுப்பாட்டில் லஞ்ச ஊழல் மற்றும்  தடுப்புத் துறை இயங்குவது வெட்கக்கேடானது என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதுள்ள ₹ 3,120 கோடி நெடுஞ்சாலைத்துறை ஊழலை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட சில மணி நேரங்களிலேயே அதிமுக தலைமைக் கழகத்தில் அமைப்புச் செயலாளர்  பொன்னையன் பத்திரிகையாளர்களை சந்தித்து உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளது என்று அறிவித்திருப்பதற்கு கடும் கண்டனத்தை  தெரிவித்துக் கொள்கிறேன். தன் மீதுள்ள ஊழல் புகாருக்கு பதில் சொல்லக்கூட அஞ்சி பரிதாபகரமான நிலையில் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அமைப்பாளர் மூலம் பதில் சொல்லியிருப்பது திமுகவின் ஊழல்  குற்றச்சாட்டுகளுக்கு முதல்வரிடம் பதில் இல்லை என்பதையும், அந்த ஊழல் புகார்கள் உண்மை என்பதையும் உறுதிபடுத்தியுள்ளது.லஞ்ச ஊழல் தடுப்புத்துறை தன்னாட்சி அந்தஸ்து பெற்ற அமைப்பு. விஜிலென்ஸ் கமிஷனரும் தன்னாட்சி அதிகாரம் பெற்றவர் என்று உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் எடுத்து வைத்த வாதங்களை தன் தீர்ப்பில் உயர்  நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நெடுஞ்சாலைத்துறையில் உள்ள எம்பவர்ட் கமிட்டி தலைவர் முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி லஞ்ச ஊழல் தடுப்புத் துறை இயக்குநர் மற்றும் விஜிலென்ஸ் ஆணையரை நியமிப்பவர்  முதல்வர். ஆகவே முதல்வருக்கு எதிரான ஊழல் புகாரினை லஞ்ச ஊழல் தடுப்புத்துறை விசாரிப்பது நேர்மையாக இருக்காது என்று சுட்டிக்காட்டித்தான் சென்னை உயர் நீதிமன்றம் இந்த ஊழல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு அளித்துள்ளது.  லஞ்ச ஊழல் தடுப்புத்துறை, விஜிலென்ஸ் ஆணையம் போன்ற அமைப்புகளின் நேர்மைத்தன்மை, சுதந்திரம் அதிமுக ஆட்சியில் பறிக்கப்பட்டுள்ளது என்பதைத்தான் இந்த தீர்ப்பு அம்பலப்படுத்தியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று வெளிவந்துள்ள அதிமுக அமைப்புச் செயலாளரின் பேட்டி லஞ்ச ஊழல் தடுப்புத்துறை அதிமுக அரசின் கட்டுப்பாட்டில் மட்டுமல்ல அதிமுக என்ற  கட்சியின் நேரடி கட்டுப்பாட்டிலேயே இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை தெளிவாக்குகிறது. ஒரு வார காலத்திற்குள் ஊழல் தொடர்பான கோப்புகளை சிபிஐயிடம் கொடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கு தடை போடும் விதமாக இந்த பேட்டி அளிக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஊழல் மற்றும் தடுப்புத் துறை அப்பீல் பற்றி அதிமுக அமைப்புச் செயலாளர் எப்படி முடிவு செய்ய முடியும்? முதல்வர் மீது மட்டுமல்ல அதிமுக அமைச்சர்கள் மீது நிலுவையில் ஊழல் வழக்குகளிலும் லஞ்ச ஊழல்  தடுப்புத்துறையின் நடவடிக்கைகளை அதிமுக தலைமைக் கழகம்தான் இனி வரும் காலங்களில் கட்டுப்படுத்தி விருப்பம்போல் ஆட்டிவைக்கப் போகிறது என்றதொரு மிகவும் வெட்கக்கேடான நிலைமை அதிமுக ஆட்சியில்  உருவாகியிருக்கிறது.ஆகவே இதற்குப் பிறகும் லஞ்ச ஊழல் தடுப்புத்துறையோ, விஜிலென்ஸ் கமிஷனோ தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பு என்று கூறும் எந்தவொரு அருகதையும் அதிமுக அரசுக்கும் இல்லை. இந்த மெகா ஊழல்  குற்றச்சாட்டிற்குள்ளாகி இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசா மிக்கு அறவே இல்லை.
ஆதாரபூர்வமான ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி தனது துறையிலேயே கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் குற்றத்திற்கு உள்ளாகியுள்ள எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியில் நீடிக்கும் அனைத்து தார்மீக உரிமைகளையும்  இழந்து விட்டதால், உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். பதவியில் நீடிக்கும் ஒவ்வொரு நிமிடமும் தமிழக நலனுக்கும், மாநிலத்தின் முன்னேற்றத்திற்கும் ஈடுகட்ட முடியாத பேரிழப்பை ஏற்படுத்துவதாக இருக்கும். முதல்வர் பதவியிலிருந்து விலக மறுத் தால், அவரை ஆளுநர்  டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள் கிறேன். அதுவே தமிழக மக்களின் விருப்பமாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ChennaiMarinaMaasiMagam

    மாசி மகத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் புகைப்படங்கள்

  • AlbinoTurtleheart

    உடலின் வெளிப்புறத்தில் இதயத்துடன் பிறந்துள்ள அபூர்வ வெள்ளை ஆமை: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

  • ModiSalmanDelhi

    சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்

  • SuperSnowMoon2k19

    அதிக ஒளியுடனும், பூமிக்கு மிக அருகிலும் தெரிந்த சூப்பர் மூன்: ரம்மியமான அரிய நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்!

  • 20-02-2019

    20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்