SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கினால் ஊழல் தடுக்கப்படும்: பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சு

2018-10-14@ 00:55:30

சென்னை: ‘‘உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனைத்து அதிகாரமும் வழங்கப்படுவதன் மூலம் ஊழல் தடுக்கப்படும்’’ என, சென்னையில் நடந்த சிறப்புக் கருத்தரங்கில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசினார். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னையில் ‘உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்குவதில் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கிறோமா?’ என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நேற்று நடந்தது. பாமக தலைவர் ஜி.கே.மணி  தலைமை வகித்தார். திண்டுக்கல், கிராமியப் பல்கலையின் பேராசிரியர் பழனித்துரை சிறப்புரையாற்றினார். பாமக நிறுவனர் ராமதாஸ் நிறைவுரையாற்றினார். அவர் பேசியதாவது: இந்தியாவில், தமிழகத்தை தவிர அனைத்து மாநிலங்களிலும் உள்ளாட்சி தேர்தல் முறையாக நடக்கிறது. இங்கு, மட்டும் இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. ஒரு டிராக்டர் வைத்து, விவசாயம் செய்து கொண்டிருந்தவன்,  அதை விற்றுவிட்டு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறான். இதற்கு தேர்தலில் வெற்றி பெற்றால், இன்னும் நான்கு டிராக்டர்கள் வாங்கலாம் என்று நினைப்பதே காரணம். உள்ளாட்சி தலைவர்கள் அனைவரும் பெண்களாக இருக்க வேண்டும். கிராம வளர்ச்சியின் மூலமாகத்தான் நாடு முன்னேற்றமடையும் என்று மகாத்மா காந்தி நம்பினார்.

அதனாலேயே சுதந்திரம் பெறுவதற்கான அறிகுறி தோன்றியவுடன் கிராமங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லை. கிராமங்களில் வசிக்கும் 25 சதவீதம் மக்கள்  நகரத்திற்கு சென்று விட்டனர்.இதற்கு, கிராமங்களில் வாழ்வதற்கான எந்த வாய்ப்புகளும் இல்லை என்பதே காரணம். மக்களை நகரங்களிலிருந்து மீண்டும் கிராமத்திற்கு கொண்டு வருவதற்கான திட்டங்கள் வேண்டும். அதை நாங்கள் தேர்தல் அறிக்கையில்  கூறியிருக்கிறோம். பட்ஜெட் போடும்போது கிராமங்களில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். கிராமசபை கூட்டம் குறித்த அனைத்து அதிகாரங்களையும் மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும். காடுகள் அழிக்கப்பட்டு வருவதால், பூமிக்கு காய்ச்சல் வந்து விட்டது. இதற்கு, கிராமங்களை அழித்ததே காரணம். உள்ளாட்சி  அமைப்புகளுக்கு அனைத்து அதிகாரத்தையும் கொடுக்க வேண்டும். அதை மேற்பார்வை ெசய்யும் அமைப்பாக மத்திய, மாநில அரசுகள் இருக்க வேண்டும்.அவ்வாறு செய்வதன் மூலம் ஊழல் நடப்பது தடுக்கப்படும்.
சிலர் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவே தலைவர், கவுன்சிலர் பதவிக்கு வருகிறார்கள். இதற்கு ஒரு மாற்றம் வரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.  


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • MadridSantaClausMarathon

  புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்ட கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான் ஓட்டம்: ஸ்பெயினில் நெகிழ்ச்சி!

 • NorthCarolinaStorm

  அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை தாக்கிய பனிப்புயலால் வெந்நிற ஆடை உடுத்தியது போல் காட்சியளிக்கும் நகரங்கள்!

 • kumbamela

  12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

 • hariyanaperison

  ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

 • Guatemalachrismas

  கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக, கவுதமாலாவில் பேய் பொம்மைகளை தீ வைத்து கொளுத்தும் பாரம்பரிய திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்