SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆந்திராவில் பட்டப்பகலில் பயங்கரம் தமிழக வாலிபர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை

2018-10-14@ 00:28:02

திருமலை: ஆந்திராவில் பட்டப்பகலில் தமிழகத்தை சேர்ந்த வாலிபரை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.மதுரையை சேர்ந்தவர் நீலமேக அமரன். இவர், ஆந்திராவின் வேம்பல்லி சோதனைச் சாவடி அருகே நேற்று சென்று கொண்டிருந்தார். அப்போது நீலமேக அமரனை பின்தொடர்ந்து காரில் வந்த மர்ம கும்பல், பயங்கர  ஆயுதங்களுடன் அவரை விரட்டிச்சென்றது. தொடர்ந்து நடுரோட்டில் வைத்து நீலமேக அமரனை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு அந்த கும்பல் காரில் ஏறி தப்பிச்சென்றது. ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்த நீலமேக  அமரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.  தொடர்ந்து போலவரம் பகுதியில் கொலையாளிகளில் 3 பேரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். தப்பி ஓடிய மூவரை தேடி வருகின்றனர்.

தப்பி ஓடியவர்கள் விட்டுச்சென்ற கார் நம்பரும் தமிழக பதிவு எண் கொண்டுள்ளதால் கொலை செய்தவர்களும் தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதற்கிடையே கொலை செய்யப்பட்ட நீலமேக  அமரன் போலீஸ் உளவாளியாக செயல்பட்டு வந்துள்ளது தெரியவந்ததுள்ளது. நீலமேக அமரன் விசாகப்பட்டினத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா கடத்தல் கும்பல் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்து  உளவாளியாக செயல்பட்டு வந்துள்ளார். இதனால் கஞ்சா கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் இவரை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ChennaiMarinaMaasiMagam

    மாசி மகத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் புகைப்படங்கள்

  • AlbinoTurtleheart

    உடலின் வெளிப்புறத்தில் இதயத்துடன் பிறந்துள்ள அபூர்வ வெள்ளை ஆமை: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

  • ModiSalmanDelhi

    சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்

  • SuperSnowMoon2k19

    அதிக ஒளியுடனும், பூமிக்கு மிக அருகிலும் தெரிந்த சூப்பர் மூன்: ரம்மியமான அரிய நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்!

  • 20-02-2019

    20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்