SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரதமர் நரேந்திரமோடி விஷ்ணுவின் 11வது அவதாரம்: பாஜ புதிய தகவல்

2018-10-14@ 00:28:01

மும்பை: பிரதமர் நரேந்திர மோடி விஷ்ணுவின் 11வது அவதாரம் என்று பாஜ தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சர்வாதிகாரத்துடன் செயல்படுவதாக காங்கிரஸ் உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் மகாராஷ்டிரா பாஜ செய்தித் தொடர்பாளர் அவ்தூத்வாக் வெளியிட்டு இருந்த  டிவிட்டர் தகவலில் பிரதமர் நரேந்திரமோடியை இந்து கடவுள் விஷ்ணுவின் 11வது அவதாரம் என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தனது கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருப்பதையடுத்து அவ்தூத்வாக் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.அதில், இந்தியாவை பாரத் மாதா என்ற கடவுளாக கருதுவதாகவும், அந்த கடவுளுக்கு நரேந்திர மோடி சேவை செய்வதாகவும் குறிப்பிட்டு இருந்தார். அதோடு பாரத மாதாவிற்கு சேவை செய்பவர் எங்களுக்கு கடவுளை போன்றவர்  என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்