SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மரியாதைக்குறைவாக நடத்தியதால் ஆத்திரம் நீதிபதியின் மனைவி, மகனை சுட்ட பாதுகாவலர் கைது

2018-10-14@ 00:28:01

குருகிராம்: டெல்லி அருகே உள்ள குருகிராமில் நீதிபதியின் மனைவி, 18 வயது மகனை துப்பாக்கியால் சுட்ட பாதுகாவலர் கைது செய்யப்பட்டார். இதில் மகனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.  டெல்லியின் புறநகர் பகுதியில் உள்ள குருகிராமில் கூடுதல் அமர்வு நீதிபதியாக கிரிஷன்காந்த் சர்மா பணியாற்றி வருகிறார்.


இவருக்கு ரீத்து என்ற மனைவியும் 18 வயதான துருவ் என்ற மகனும் உள்ளனர். நீதிபதியின் வீட்டில்  பாதுகாவலராக தலைமை காவலர் மஹிபால் சிங் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.  நேற்று மதியம் 3.30 மணி அளவில் ரீத்து, மகனுடன் கடைக்கு பொருட்களை வாங்க சென்றார். பாதுகாவலர் மஹிபாலும் உடன் சென்றார். செக்டார் 49ல் அர்கேடியா மார்கெட் பகுதியில், திடீரென மஹில் சிங் துப்பாக்கியை  எடுத்து ரீத்து மற்றும் துருவை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். துப்பாக்கி சத்தம் கேட்டு மக்கள் அங்கு திரண்டனர். படுகாயம் அடைந்த அவர்களை அங்கிருந்தவர்கள்  மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் துருவ் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.


இதற்கிடையே, தப்பி காவல் நிலையத்துக்கு ஓடிய மஹிபால் சிங் அங்கும் துப்பாக்கியால் சுட்டுள்ளார். அவரை பிடிக்க இன்ஸ்பெக்டர் முயன்றபோது, தள்ளிவிட்டு தப்பினார்.  ஆனால், பரீதாபாத்தில் மஹிபால் சிங்கை போலீசார்  கைது செய்தனர். முதல்கட்ட விசாரணையில்,  நீதிபதியின் வீட்டில்  மரியாதை குறைவாக நடத்தப்பட்டுள்ளதால் மஹிபால் சிங் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் அவர் ஆத்திரத்தில் அவர்களை சுட்டு கொல்ல நினைத்திருக்கலாம் என  தெரிய வந்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-02-2019

    24-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-02-2019

    23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்