SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை: ரேவதி, பத்மபிரியா, பார்வதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் குற்றச்சாட்டு

2018-10-14@ 00:27:59

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை என்று பிரபல நடிகைகளான ரேவதி, பத்மபிரியா, பார்வதி ஆகியோர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரபல மலையாள இளம்நடிகை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கொச்சியில் வைத்து காரில் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டார். ஆனால் அடுத்த சில மாதங்களிலேயே அவர் மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். இதற்கு மலையாள  முன்னணி நடிகைகளிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதை எதிர்த்து நடிகை கீது மோகன்தாஸ், பாவனா, ரீமா கல்லிங்கல் ஆகியோர் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்தனர்.இதற்கிடையே, மலையாள பெண் சினிமா கலைஞர்கள் என்ற பெயரில் புதிய ஒரு சங்கம் தொடங்கப்பட்டது. நடிகைகள் ரேவதி, பத்மபிரியா, பார்வதி, மஞ்சு வரியார் உட்பட பலர் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த சங்கம் சார்பில் நடிகர் திலீப் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மலையாள நடிகர் சங்கத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் இரண்டு முறை கடிதம் அனுப்பியும் நடிகர் சங்கம் எந்த நடவக்கையும் எடுக்கவில்லை.  மூன்றாவது முறையாக பெண் சினிமா கலைஞர்கள் கடிதம் எழுதிய பின்னரே அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த நடிகர் சங்கம் தயாரானது.

இந்நிலையில் நடிகைள் ரேவதி, பத்மபிரியா, பார்வதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் ஆகியோர் ெகாச்சியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: நடிகை பலாத்கார சம்பவத்திற்கு பின்னர்  நடந்த நடிகர் சங்க நிர்வாக குழு கூட்டத்தில் திலீப் மீது நடவடிக்ைக எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பலாத்காரம் செய்யப்பட்ட நடிகைக்கு  இதுவரை நடிகர் சங்கம் எந்த பாதுகாப்பும் அளிக்கவில்லை. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திலீப் மீது நடவடிக்கை எடுப்போம் என்று கூறி ஏமாற்றி விட்டனர். மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இரவில் 17 வயதான ஒரு இளம்நடிகை ரேவதியின் அறை கதவை தட்டினார். அவர்  கதவை திறந்தபோது அக்கா என்னை  காப்பாற்றுங்கள் என கூறி அழுதார். இதுபோன்ற பல சம்பவங்கள் மலையாள சினிமாவில் நடந்து வருகிறது. இனியும் பொறுமை காக்கவேண்டிய தேவையில்லை. நாளை இந்த மலையாள சினிமாவிற்கு வர இருக்கும் இளைய  தலைமுறைகளை காப்பாற்றத்தான் நாங்கள் இப்ேபாது போராடுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரம்யா நம்பீசன் கூறுகையில், ‘‘15 ஆண்டுகளாக மலையாள சினிமாவில் இருந்து வரும் ஒரு நடிகைக்கு கொடுமையான சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட அந்த நடிகை, நடிகர் சங்கத்திற்கு வெளியே உள்ளார். ஆனால்  குற்றம்சாட்டப்பட்ட நடிகர் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இது எந்த விதத்தில் நியாயம்? தற்போது உலகம் முழுவதும் ‘மீ டூ’ பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தி பட உலகிலும் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தி  வருகிறது. அங்கு புகார் செல்லப்பட்ட கலைஞர்களுக்கு எதிராக நடிகர்கள் அமீர்கான், அக்‌ஷய் குமார் உட்பட பலர் நடவடிக்ைக எடுத்து வருகின்றனர். ஆனால் மலையாள சினிமாவில் அதற்கு நேர் மாறாக  நடந்துகொண்டிருக்கிறது. குற்றம்சாட்டப்பட்ட திலீப்பை வைத்து இயக்குனர் உண்ணிகிருஷ்ணன் சவால் விட்டு படம் எடுக்கிறார். இது மிகுந்த வேதனையளிக்கும் சம்பவம்’’ என்றார்.பேட்டியின்போது நடிகைகள் அனைவரும் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கருப்பு உடை அணிந்து வந்திருந்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-02-2019

  24-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-02-2019

  23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • chennai_pkankatchui1

  சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

 • israelmoonshuttle

  சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

 • chennai_laksh1

  திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்