SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவத்தின் 4வது நாள் கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி: இன்று இரவு தங்க கருட சேவை

2018-10-14@ 00:27:59

திருமலை: திருப்பதி கோயில் நவராத்திரி பிரமோற்சவத்தின் 4வது நாளில் கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று இரவு முக்கிய நிகழ்வான தங்க கருட சேவை  நடக்கிறது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரமோற்சவம் கடந்த 10ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. பிரமோற்சவத்தின் 3வது நாளான நேற்றுமுன்தினம் தங்க சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி உலா வந்தார்.  இரவு அலங்கரிக்கப்பட்ட முத்துப்பந்தல் வாகனத்தில் தேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி எழுந்தருளி நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இந்நிலையில், பிரமோற்சவத்தின் 4வது நாளான நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட தங்க கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி யானை, குதிரை, காளை அணிவகுத்து செல்ல நான்கு மாடவீதியில் பவனி  வந்த சுவாமியை திரண்டிருந்த லட்சக்கணக்கான  பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.

வீதியுலாவில் ஏராளமான கலைஞர்கள் மேளதாளத்துடன் சுவாமி வேடங்களில் நடனமாடியபடி வந்தனர். தொடர்ந்து இரவு சர்வ பூபாள வாகனத்தில் மலையப்பர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை மோகினி அலங்காரத்திலும், இரவு பிரம்மோற்சவத்தின் மிக முக்கிய நிகழ்வான தங்க கருட சேவையும் நடைபெறுகிறது. தசரா விடுமுறை, வார விடுமுறை காரணமாக தங்க கருட சேவையை காண பல்வேறு  மாநிலங்களில் இருந்து பக்தர்கள் திருமலைக்கு திரண்டுள்ளனர். இதனால் திருமலை முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. பல பக்தர்கள் அறைகள் கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஆங்காங்கே அன்னப்பிரசாதம், குடிநீர் போன்றவை வாரி சேவா பக்தர்களால் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்