SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பயணிகள் வாகன விற்பனை செப்டம்பரில் 5.6% சரிவு

2018-10-14@ 00:27:57

புதுடெல்லி : பயணிகள் வாகனங்களின் விற்பனை கடந்த மாதம் ( செப்டம்பரில்) 5.6 சதவீதம் சரிந்துள்ளது.செப்டம்பரில் எலக்டரானிக் மோட்டார் பைக் வாகன விற்பனை 4.21 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2,126,484 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. மூன்றாம் நபர் விபத்து காப்பீடு காரணமாக இன்சூரன்ஸ் செலவுகள் அதிகரித்துள்ளதும்  விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு உயரவில்லை என காரணம் கூறப்படுகிறது. மோட்டார் சைக்கிள் விற்பனை உயர்ந்த போதும், ஸ்கூட்டர் பிரிவில், ஜூலை - செப்டம்பர் காலாண்டில், விற்பனை உயரவும் இல்லை. சரியவும் இல்லை. அதே நேரம் வர்த்தக வாகனங்கள் விற்பனை இரட்டை இலக்க  வளர்ச்சியை கண்டுள்ளது. செப்டம்பரில் டிரக்குகள், பேருந்துள் விற்பனை 24.14 சதவீதம் உயர்ந்து 95,867 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. மூன்று சக்கர வாகன பிரிவிலும் இரட்டை இலக்க வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. இதே  காலத்தில் இதன் வளர்ச்சி 11.65 சதவீதம் அதிகரித்து 69,066 வாகனங்கள் விற்கப்பட்டுள்ளது.  எஸ்ஐஏஎம் தலைவர் ராஜன் வதேரா கூறுகையில், கடந்தாண்டு நவராத்திரி பண்டிகை செப்டம்பரில் வந்தது. இந்த ஆண்டு  அக்டோபருக்கு சென்றது. இதனால் இரண்டாவது காலாண்டில் விற்பனை குறைய காரணமானது’’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்