SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2,000 கள்ளநோட்டுடன் இளம்பெண் பிடிபட்டார்

2018-10-14@ 00:27:55

* அதிமுக வட்ட செயலாளருக்கு தொடர்பா? l போலீசார் தீவிர விசாரணை
சென்னை: சென்னையில் கள்ளநோட்டுகளை மாற்றிய இளம்பெண் கைது செய்யப்பட்டார்.  சென்னை சைதாப்பேட்டை மேற்கு ஜோன்ஸ் ரோட்டை சேர்ந்தவர் வனிதா (30), திருமணமாகாதவர். இவர், தற்போது மாதவரம், தணிகாசலம் நகர் 8வது தெருவில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார். இவர்,  தினமும் காலையில் வீட்டுக்கு வருவதும், இரவு நேரங்களில் வெளியில் சென்று விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும், வாரத்திற்கு ஒருநாள் இரவு வீட்டில் தங்குவார். அப்போதும் உறவினர்கள் என்று ெசால்லிக்  கொண்டு வெளியாட்கள் அவரை தேடி வருவார்கள். துணிக்கடையில் வேலை செய்யும்போது சத்யா என்ற பெண்ணுடன் வனிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் மூலமாக மாதவரம் மண்டலம், 26வது பகுதியை சேர்ந்த அதிமுக வட்ட செயலாளராக உள்ள காமேஷ்  என்பவருடனும் வனிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.தனது தோழி சத்யாவிடம் செலவுக்கு பணம் இல்லை என்று வனிதா கூறியுள்ளார்.அவர் அதிமுக வட்டச் செயலாளர் காமேஷிடம் கள்ளநோட்டுகள் ரூ.50 ஆயிரத்தை வாங்கி வனிதாவுக்கு கொடுத்துள்ளார். அந்த பணத்தை  மாற்றுவதற்காக வனிதா நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் அமைந்தகரை பகுதியில் உள்ள சோனியா மருந்துக்கடைக்கு சென்றுள்ளார். அங்கு மருந்து சீட்டை கொடுத்து ரூ.2ஆயிரம் நோட்டை கொடுத்து ரூ.300க்கு மருந்து  வாங்கியுள்ளார். மீதி சில்லரையாக ரூ.1700 வாங்கிக் கொண்டு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் மருந்து கடையின் உரிமையாளருக்கு வனிதா கொடுத்த பணத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டை  எடுத்து பார்த்த போது கள்ளநோட்டு என சந்தேகம் அடைந்தார். அதிர்ச்சியடைந்த அவர்  ஓடிச் சென்று அருகில் உள்ள மருந்து கடைகளில்,  நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். பிறகு சிறிது நேரத்திற்குள் அதே பகுதியில் உள்ள  மற்றொரு கடைக்கு சென்று, மருந்து சீட்டை கொடுத்து அதே பெண் (வனிதா) மருந்து வாங்கிய போது, கடைக்காரருக்கு சந்தேகம் ஏற்பட்டு சோனியா என்ற மருந்துக்கடையின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்படி, அவர் அந்த கடைக்கு விரைந்து வந்து பார்த்த போது தன்னிடம் ஏமாற்றிய பெண் தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து அமைந்தகரை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார்  சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இளம்பெண்ணை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவரிடம் நடத்திய சோதனையில் மணிபர்சில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் 17ம், ஐநூறு ரூபாய்  கள்ளநோட்டுகள் மூன்று இருந்ததும் தெரியவந்தது. போலீசார் வனிதா மீது வழக்கு பதிவு செய்தனர். தீவிர விசாரணையில், காமேஷ் என்பவர்தான் பணம் கொடுத்ததாக அவர் கூறினார். அவர் அளித்த தகவலின்படி அதிமுக வட்ட செயலாளர் காமேஷ் மீது போலீசார் வழக்கு பதிவு  அவரை தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் முக்கிய நபர்கள் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • MadridSantaClausMarathon

  புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்ட கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான் ஓட்டம்: ஸ்பெயினில் நெகிழ்ச்சி!

 • NorthCarolinaStorm

  அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை தாக்கிய பனிப்புயலால் வெந்நிற ஆடை உடுத்தியது போல் காட்சியளிக்கும் நகரங்கள்!

 • kumbamela

  12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

 • hariyanaperison

  ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

 • Guatemalachrismas

  கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக, கவுதமாலாவில் பேய் பொம்மைகளை தீ வைத்து கொளுத்தும் பாரம்பரிய திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்