SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சமூக வலைதளம் மூலம் 500-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய காதல் மன்னன் கைது

2018-10-13@ 15:15:11

ஆந்திரா: ஆந்திராவில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் காதல்வலை வீசி 500-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஏமாற்றிய மோசடி மன்னனை போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திராவில் பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்த இளம்பெண்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் மகள்கள், சினிமா பிரமுகர்கள் வீட்டு பெண்களும் இவரது மோசடியில் சிக்கியிருப்பது தெரிய வந்துள்ளது. கர்னூல் மாவட்டத்தில் பணியாற்றி வந்த ராஜ்குமார் மோசடி மன்னனாக வலம் வந்து 500 இளம் பெண்கள் வாழ்வில் விளையாடியிருப்பது போலீசாரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 இயற்கையில் வழுக்கை தலையுடன் இருக்கும் ராஜ்குமார் விக் வைத்து,  கோர்ட் சூட் அணிந்து டிப் டாப்பாக தோற்றத்தை மாற்றி புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. பல ஆண் விளம்பர மாடல்களின் புகைப்படத்தை பதிவேற்றியும் ராஜ்குமார் மோசடியை அரங்கேற்றியுள்ளார். இளம்பெண்கள் பலர் கற்பையும், நகை, பணத்தையும் இழந்த பின்னரே இவர் மோசடி மன்னன் என்பதை அறிந்து அலறியுள்ளனர்.

பணம் கொடுக்காததால் தம்முடன் தனிமையில் இருந்த இளம் பெண்ணின் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டதால் அந்த பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். 2016-ம் ஆண்டில் கைது செய்யப்பட்ட ராஜ்குமார் பின்னர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னரும் இதே பாணியில் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-02-2019

    24-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-02-2019

    23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்