SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேனி மாவட்டம் முழுவதும் எடப்பாடியை புகழந்து சுவரொட்டிகள் : ஓ.பன்னீர்செல்வத்தை ஓரங்கட்ட திட்டமா?

2018-10-13@ 14:42:41

தேனி: எடப்பாடியார் பேரவை என்ற பெயரில் முதலமைச்சரை புகழ்ந்து தேனி மாவட்டம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பது ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தேனி, பெரியகுளம், கம்பம் உட்பட தேனி மாவட்டம் முழுவதும் எடப்பாடி பேரவை சார்பில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிகத்தில் சிறப்பான ஆட்சியை நடத்தி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சொந்த மாவட்டமான தேனியில் அதிமுக ஆட்சி பற்றி ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில் ஒரு இடத்தில் கூட அவரது பெயர் இடம் பெறாதது பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதிமுக அணிகள் இணைப்புக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரை எடப்பாடி தரப்பு தொடர்ந்து ஓரங்கட்டுவதாக விமர்சனங்கள் எழுந்தது.

இதனால் தான் டிடிவி தினகரனை மீண்டும் ரகசியமாக பன்னீர்செல்வம் முயன்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது சொந்த மாவட்டத்திலேயே பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டும் வகையில் எடப்பாடிக்கு முக்கியத்துவம் அளித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

  • oaman_thee11

    மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

  • AftermathProtestHK

    ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்