SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மீண்டும் பள்ளிக்கு செல்லத் துவங்கினாள் தாலிபான்களால் சுடப்பட்ட மலாலா

2013-03-20@ 15:06:08

இங்கிலாந்து: தீவிரவாதிகளால் சுடப்பட்டு மருத்துவமனையில் இருந்த மலாலா இன்று மீண்டும் பள்ளிக்கு செல்லத் துவங்கினார். பாகிஸ்தானில் உள்ள அனைத்துப் பெண்களும் கல்வி அறிவு பெற வேண்டும் மற்றும் பெண்களின் உரிமைக்காக குரல் கொடுத்து வந்த , 15 வயதான மலாலா யூசபாய் என்ற பாகிஸ்தான் சிறுமி கடந்த அக்டோபர் மாதம் பேருந்து நிறுத்தத்தில் தாலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் மலாலாவின் தலையில் மூளைப்பகுதியின் அருகில் குண்டடிபட்டது. உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மலாலா பின்னர் மேல் சிகிச்சைக்காக இங்கிலாந்து அனுப்பி வைக்கப்பட்டார்.

இங்கிலாந்தின் பர்மிங்காமில் உள்ள ராணி எலிசபெத் மருத்துவமனையில் மலாலாவுக்கு மண்டை ஓடு மற்றும் காது பகுதிகளில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் உடல் நலம் தெரிய மலாலா ஜனவரி  மாதம் இறுதியில்  மருத்துவமையில் இருந்து வீடு திரும்பினார்.

இன்று பர்மிங்காமில் உள்ள பெண்கள் எட்ஜ்பாஸ்டன் உயர்நிலை பள்ளியில் தமது பாடங்களை மீண்டும் படிக்கத் துவங்கி உள்ளாள்.

. இதுகுறித்து மலாலா கூறிகையில், தான் மிகவும் மகிச்சியாக உணருவதாகவும், தமது ஆசையான மீண்டும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்ற கனவு நிறைவேறி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தனது பாகிஸ்தானில் உள்ள பள்ளித் தோழர்களை பிரிந்ததை நினைத்து வருத்தப்படுவதாகவும், இருப்பினும் இங்கு தமக்கு புதிய நபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கிடைத்ததை எண்ணி மகிழ்வதாகவும் அவர் தெரிவித்தார்.

watching my girlfriend cheat open my girlfriend cheated
plavix plavix 300 plavix plm


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ballon3

    பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

  • police3

    அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

  • mkstalin3

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

  • 03-06-2020

    03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • schoolopen3

    சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்