SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாலையில் தூங்கிய கண் பார்வை இல்லாத இளம் பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்து கொலை

2018-10-13@ 11:11:11

சென்னை: சென்னையை அடுத்த வண்டலூரில் கண் பார்வை இல்லாத இளம் பெண்ணை மர்மநபர் கத்தி முனையில் கடத்தில் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்ட இளம்பெண் விஜயலட்சுமி என்பவர் ஆவார். பி.ஏ. பட்டதாரியான அவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் கண்ணில் காயம் ஏற்பட்டதால் காட்டாங்குளத்தூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அப்போது அங்கு உதவியாளராக பணியாற்றிய மணிகண்டன் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இதனை உறவினர்கள் ஏற்காததால் வண்டலூர் மேம்பாலம் கீழ் தங்கி பேப்பர் சேகரித்து சாலையிலேயே தங்கி அவர்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர். இந்நிலையில் மேம்பாலம் கீழ் விஜயலட்சுமி இரவு தூங்கி கொண்டிருந்த போது மர்மநபர் ஒருவர் கத்திமுனையில் அவரை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து குத்தி கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதுபற்றி ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ll112345

    102 வயதான மூதாட்டி ஸ்கை டைவிங் செய்து புதிய உலக சாதனை!

  • rajini_birthdy

    நடிகர் ரஜினிகாந்தின் 69 வது பிறந்த நாள் ஸ்பெஷல்: ரஜினிகாந்த் அரிய புகைப்படங்கள்!

  • snowfall_kedarnth

    கேதார்நாத்தில் கடும் பனி பொழிவு: உறைபனியில் மூடப்பட்ட கேதார்நாத் கோயில்

  • mukesamba_daugfes

    முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமால் திருமண ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி!

  • glassroof_simla

    இயற்கை காட்சிகளை உள்ளிருந்து ரசிக்க வைக்கும் வகையில் ஷிம்லா-கல்கா வரை கண்ணாடி மேற்கூரை கொண்ட ரயில்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்