188 வாக்குகள் பெற்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினரானது இந்தியா
2018-10-13@ 10:10:33

ஜெனீவா: ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான வாக்கெடுப்பில் இந்தியா 188 வாக்குகள் பெற்று உறுப்பினராக இடம் பிடித்துள்ளது. ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் புதிய உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய வாக்கெடுப்பு ஐ.நா. தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் உறுப்பினராவதற்கு குறைந்தபட்சம் 97 வாக்குகள் தேவைப்படுகிறது. ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான வாக்கெடுப்பில் இந்தியா 188 வாக்குகள் பெற்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் உறுப்பினராக இடம் பிடித்துள்ளது.
இதன் மூலம் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் 3 ஆண்டுகளுக்கு இந்தியா மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினராக இருக்கும். இது தொடர்பாக ஐ.நா.வுக்கான இந்தியாவின் தூதுவர் சையது அக்பருதீன், ஆதரவளித்தவர்களுக்கு நன்றி! மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.
சுஷ்மா சுவராஜ்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இடம் பெறுவதற்கான போட்டியில் இந்தியா 193க்கு 188 வாக்குகள் பெற்று தேர்வாகியுள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாக். உறவு மோசமாகி விட்டது: டிரம்ப் கருத்து
உலகின் மிகப் பெரிய தேனீ இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு
இந்தியா - பாகிஸ்தான் இடையே ஆபத்தான சூழ்நிலை: புல்வாமா தாக்குதலை அடுத்து டிரம்ப் பேட்டி
பெரு நாட்டின் ஈக்வடாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 7.5ஆக பதிவு
உலக நாடுகள் நிர்ப்பந்தத்துக்கு பணிந்து ஜெய்ஷ் தீவிரவாத அமைப்பு தலைமை அலுவலகம் முடக்கம்: பாகிஸ்தான் நடவடிக்கை
லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நாளை 91வது ஆஸ்கர் விருது விழா