டியான்ஜின் ஓபன் டென்னிஸ் அரை இறுதியில் கார்சியா
2018-10-13@ 00:54:17

பெய்ஜிங் சீனாவில் நடைபெறும் டியான்ஜின் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா தகுதி பெற்றார். கால் இறுதியில் குரோஷியாவின் பெத்ரா மார்டிச்சுடன் நேற்று மோதிய கார்சியா 6-2 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டிலும் அவர் 1-0 என முன்னிலை பெற்ற நிலையில், காயம் காரணமாக மார்டிச் விலகினார். இதையடுத்து கார்சியா அரை இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு கால் இறுதியில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 5-7, 6-0, 6-3 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் கேட்டி போல்ட்டரை 2 மணி, 7 நிமிடம் போராடி வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.
சுவிஸ் வீராங்கனை டிமியா பாஸ்கின்ஸி - அரினா சபலென்கா (பெலாரஸ்) இடையே நடந்த கால் இறுதி ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த 2 செட்களிலும் பாஸ்கின்ஸி 7-6 (7-2), 7-6 (7-5) என்ற கணக்கில் போராடி வென்றார். இப்போட்டி 2 மணி, 16 நிமிடத்துக்கு நீடித்தது. கடைசி கால் இறுதியில் தைபே வீராங்கனை சூ வெய் சை 6-2, 4-0 என்ற நேர் செட்களில் எலிஸ் மெர்டன்சை (பெல்ஜியம், காயத்தால் விலகல்) வீழ்த்தினார்.
மேலும் செய்திகள்
லாரெஸ் விருது விழா 2019: இந்தியாவை சேர்ந்த யுவா விளையாட்டு அமைப்பிற்கு நல்லெண்ண விருது
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுமா? : வரும் 27ம் தேதி நடைபெறும் ஐசிசி கூட்டத்தில் முடிவு
6 பேர் டக் அவுட் வெறும் 24 ரன்னில் சுருண்டது ஒமான்
மீண்டும் பந்துவீசலாம் தனஞ்ஜெயாவுக்கு ஐசிசி அனுமதி
முதல் ஒருநாள் போட்டியில் இன்று வெஸ்ட் இண்டீசுடன் இங்கிலாந்து மோதல்
ஜோகோவிச்சுக்கு லாரியஸ் விருது
மாசி மகத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் புகைப்படங்கள்
உடலின் வெளிப்புறத்தில் இதயத்துடன் பிறந்துள்ள அபூர்வ வெள்ளை ஆமை: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!
சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்
அதிக ஒளியுடனும், பூமிக்கு மிக அருகிலும் தெரிந்த சூப்பர் மூன்: ரம்மியமான அரிய நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்!
20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்