SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா - சீனா மோதல்

2018-10-13@ 00:53:44

சுஸோவ்: இந்தியா - சீனா அணிகள் மோதும் நட்பு ரீதியிலான சர்வதேச கால்பந்து போட்டி இன்று நடைபெறுகிறது. இரு அணிகளும் 21 ஆண்டுகளுக்குப் பிறகு நேருக்கு நேர் மோதுகின்றன.இந்தியா - சீனா கால்பந்து அணிகளிடையே இதுவரை 17 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வரும் சீன அணி 12 வெற்றிகளைப் பதிவு செய்துள்ள நிலையில், 5 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன. இந்திய அணியால் ஒரு ஆறுதல் வெற்றியைக் கூட பெற முடியவில்லை. கடைசியாக 1997ம் ஆண்டு கொச்சியில் நடந்த நேரு கோப்பை போட்டியில் சீன அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வென்றுள்ளது.

இந்த நிலையில், 21 ஆண்டுகளில் முதல் முறையாக இரு அணிகளும் மோதும் நட்பு ரீதியிலான சர்வதேச கால்பந்து போட்டி சீனாவின் சுஸோவ் நகரில் இன்று நடைபெறுகிறது. ஆசிய கோப்பை கால்பந்து போட்டித் தொடருக்கு இன்னும் 3 மாதங்களுக்கு குறைவான அவகாசமே உள்ளதால், இந்த போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பிபா உலக தரவரிசையில் சீன அணி 76வது இடத்திலும், ஆசிய அளவில் 6வது இடத்திலும் உள்ளது. இந்திய அணி உலக அளவில் 97வது இடத்திலும், ஆசிய அளவில் 15வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்