SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ஒரே நாளில் 38 பைசா உயர்வு

2018-10-13@ 00:38:37

புதுடெல்லி: சர்வதேச வர்த்தகத்தின் கடைசி நாளில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 3 டாலர் சரிந்தது. இதனால், அமெரிக்க டாலருடனான இந்திய ரூபாய் மதிப்பு 38 பைசா உயர்ந்தது.
ஈரான், துபாய் போன்ற நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றை இந்தியா இறக்குமதி செய்கிறது. இதற்காக, வங்கிகள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் அமெரிக்க டாலரை பரிமாற்றம் செய்து வருகின்றன. இதனால், அன்னிய செலாவணி மார்க்கெட்டில் இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி அடைந்தது. இந்த வாரம் உலகளாவிய சந்தை நிலவரத்தின் அடிப்படையில் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில், நேற்று முன்தினம் வியாழனன்று  தொடக்கத்தில் ₹74.50 ஆக சரிந்தது. அன்று மாலையில் ₹74.12 ல் நிலைக்கொண்டது. ரூபாயின் மதிப்பு இவ்வாறு சரிந்தது, இதுவே முதல்முறையாகும். இதன் காரணமாக, இறக்குமதியாளர்கள் கவலை அடைந்தனர்.  இந்நிலையில், நேற்றைய மார்க்கெட்டின் தொடக்கத்தில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 3 சதவீதம் சரிந்து, 80.37 டாலரானது. இதனால், இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்தது. காலை நேர வர்த்தகத்தின்படி, அமெரிக்க டாலர் மதிப்புக்கான இந்திய ரூபாயின் மதிப்பு 38 காசுகள் உயர்ந்து ரூ.73.74 ஆக காணப்பட்டது. அன்னிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு, வர்த்தகத்துக்கு ஆதரவாக இருக்கும் என்று இறக்குமதியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ChennaiMarinaMaasiMagam

    மாசி மகத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் புகைப்படங்கள்

  • AlbinoTurtleheart

    உடலின் வெளிப்புறத்தில் இதயத்துடன் பிறந்துள்ள அபூர்வ வெள்ளை ஆமை: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

  • ModiSalmanDelhi

    சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்

  • SuperSnowMoon2k19

    அதிக ஒளியுடனும், பூமிக்கு மிக அருகிலும் தெரிந்த சூப்பர் மூன்: ரம்மியமான அரிய நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்!

  • 20-02-2019

    20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்