SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தங்கம் விலை கிடு, கிடு உயர்வு ...ஒரே நாளில் சவரனுக்கு ரூ.280 அதிகரிப்பு

2018-10-13@ 00:37:29

சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் கிடு,கிடுவென சவரனுக்கு ₹280 உயர்ந்தது. 2 ஆண்டுகளுக்கு பிறகு சவரன் ₹24,208 என்ற புதிய உச்சத்தை தொட்டது. இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து உயர்ந்து வருகிறது. தொடர்ச்சியாக கடந்த 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை 6 நாட்கள் தங்கம் விலை சவரனுக்கு ₹744 அளவுக்கு உயர்ந்தது. அதிகபட்சமாக கடந்த 6ம் தேதி ஒரு சவரன் ₹24,064க்கு விற்கப்பட்டது.அதன் பிறகு 3 நாட்கள் அதாவது, 8ம் தேதி ஒரு சவரன் ₹23,848 ஆகவும், 9ம் தேதி ₹23,776, 10ம் தேதி ₹23,744 ஆகவும் விலை குறைந்தது. அதன் பிறகு மீண்டும் தங்கம் விலை உயர தொடங்கியது. நேற்று முன்தினம் கிராமுக்கு ₹23 உயர்ந்து ஒரு கிராம் ₹2,991க்கும், சவரனுக்கு ₹184 உயர்ந்து ஒரு சவரன் ₹23,928க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில் நேற்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதாவது, கிராமுக்கு ₹35 உயர்ந்து ஒரு கிராம் ₹3,026க்கும், சவரன் ₹280 உயர்ந்து ஒரு சவரன் ₹24,208க்கு விற்கப்பட்டது. மீண்டும் தங்கம் விலை ₹24 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. தங்கம் விலை கடந்த 2 நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருவது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதுகுறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது:

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அதே நேரத்தில் உலக சந்தையிலும் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இந்த இரண்டு காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. முன்னர் எல்லாம் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, உலக சந்தையில் தங்கம் விலை குறைவு என்றும், உலக சந்தையில் தங்கம் விலை உயர்வு, ரூபாயின் மதிப்பு உயர்வு என்று மாறி, மாறி நடக்கும். ஆனால், தற்போது இரண்டு ஒரு சேர நடந்து வருகிறது. இதனால், தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. இன்னும் தங்கம் விலை உயர தான் வாய்ப்புள்ளது. தங்கம் விலை உயர்ந்தாலும் நகைக்கடைகளில் விற்பனை பாதிக்கப்படவில்லை. ஏனென்றால் தங்கம் விலை இன்னும் உயரும் என்று கருதி மக்கள் நகை வாங்க வருகின்றனர். அதே நேரத்தில் நவராத்திரியில் நகை வாங்கினால் சுபிட்சமாக இருக்கும் என்று மக்கள் கருதுகின்றனர். இதனாலும், மக்கள் இந்த நேரத்தில் ஆர்வமுடன் நகை வாங்க கடைகளுக்கு வருகின்றனர்.     
இவ்வாறு அவர் கூறினார்.

மீண்டும் உச்சத்தை தொடுகிறது

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி ஒரு கிராம் தங்கம் ₹3,023க்கும், ஒரு சவரன் ₹24,184க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு 2 ஆண்டுகள் கழித்து இப்போது தங்கம் விலை
₹ 24,208க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CivilAviationJetAirways

    மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

  • RajivAnniversary28

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

  • ICRA2019

    கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

  • ChongqingCycleRace

    சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

  • BrazilBarMassacre

    பிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்