SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க ரூ.1 மானியத்துடன் முடிந்தது எண்ணெய் நிறுவனங்களின் தியாகம்

2018-10-13@ 00:36:43

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் மானியத்தை எண்ணெய் நிறுவனங்கள் இனி ஏற்காது.பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் பெட்ரோல், டீசல் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. கடந்த சில மாதங்களாக விலை தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியது. எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்தும், போராட்டங்கள் நடத்தியும் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு முன்வரவில்லை. வரியை குறைத்தால் வருவாய் குறையும் என மறுத்து வந்தது.

 இந்த நிலையில் கடந்த 4ம் தேதி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை தலா ₹1.50 குறைத்து மத்திய அரசு அறிவித்தது. இது தவிர 1 ரூபாய் இழப்பை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கும். இதன்மூலம் நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை  ₹2.50க்கு மேல் குறைந்தது. இந்த அறிவிப்புக்கு பிறகு சென்னையில் ₹2.63, டீசல் ₹2.68 குறைந்தது. அதாவது சென்னையில் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பெட்ரோல் ₹8.07 டீசல் ₹8.17 உயர்த்திய பிறகு இந்த அறிவிப்பு வெளியானது. ஆனால், அடுத்த நாளில் இருந்தே பெட்ரோல் விலை 91 காசு, டீசல் ₹1.79 உயர்த்திய எண்ணெய் நிறுவனங்கள், தாங்கள் தியாகம் செய்ய ஒரு ரூபாய் மானியத்தை மீட்டு விட்டன. இனி, எண்ணெய் நிறுவனங்கள் மானியச்சுமையை ஏற்காது என மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் கூறுகையில், ஒரு ரூபாய் மானியச் சுமையை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது ஒரு முறை தான். இது மீண்டும் தொடராது. எண்ணெய் நிறுவனங்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயிக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஓஎன்ஜிசி யிடமும் மானியத்தை ஏற்குமாறு வேண்டுகோள் விடுக்கப்படாது.. அப்படி ஒரு திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்