SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சங்கர் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

2018-10-13@ 00:34:34

சென்னை: ஐஏஎஸ் அகாடமி சங்கர் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளாக நினைக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்த சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் திடீரென்று மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது மறைவிற்கு திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரது குடும்பத்தினருக்கும், அவரை நம்பியிருந்த எண்ணற்ற இளைஞர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டின் நிர்வாக கட்டமைப்புக்கு தேவையான ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் என பல அரசு அதிகாரிகளை உருவாக்கி, தமிழகத்தின் தலைநகரமாம் சென்னையில் வெற்றிகரமாக ஐ.ஏ.எஸ் அகாடமிகளை நடத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய அவரது மறைவு, இளைஞர்களுக்கும், கிராமங்களில் இருந்து அகில இந்திய தேர்வுகளை எழுத விரும்பிய ஏழை எளிய மாணவர்களுக்கும் பேரிழப்பாகும்.

திருநாவுக்கரசர் (தமிழக காங்கிரஸ் தலைவர்):  அண்ணாநகரில் சுமார் 4 ஆண்டுகளாக புகழ்பெற்ற சங்கர் ஐஏஎஸ் அகாடமி சங்கரன் தலைமையில் சிறப்பாக செயல்பட்டது. இதில் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் படிப்புகளில் வெற்றி பெற்று இந்திய அளவில் உயர்ந்த பொறுப்புகளை பெற இளைஞர்களுக்கு கல்வியும், பயிற்சியும் தந்து பலர் தேர்ச்சி பெற வழியமைத்து கொடுத் தவர். அவரின் மறைவு செய்தி துயரத்தை தந்துள்ளது.

அன்புமணி (பாமக இளைஞர் அணி தலைவர்): நூற்றுக்கணக்கானவர்களை குடிமைப்பணி அதிகாரிகளாக உருவாக்கினார் சங்கர். ஏழை மாணவர்கள் பலருக்கு கட்டணமின்றி பயிற்சி அளித்தவர். போட்டித் தேர்வுகளின் நுணுக்கங்களை மாணவர்களுக்கு விளக்கி வெற்றிக்கு வழி வகுத்தவர்.சமூக நீதியில் அக்கறை கொண்ட அவர், அதற்காக வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் பல்வேறு தளங்களில் குரல் கொடுத்துள்ளார். அவரது மறைவு போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். சங்கரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் மாணவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழிசை (பாஜ மாநில தலைவர்): இந்திய அரசு குடிமைப்பணியில் அமர 900 சாதனையாளர்களை உருவாக்கிய சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனரின் அகால மரணம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. தென்னாட்டு ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கிய சாதனையாளரின் இறுதியான விண்ணுலகப்பயணம் நம்மை வருத்துகிறது. அவரது குடும்பத்திற்கு தமிழக பாஜ சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-12-2018

  16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • lisbon_tramp11

  லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

 • 15-12-2018

  15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • AmazonIllegalMining

  அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

 • chinasnowfall

  கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்